வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2025 04:18
சாலையில் மது அருந்துவதை கட்டாய தடை செய்யவேண்டும்
மூணாறு:கேரளமாநிலம் மூணாறு எஸ்.ஐ., அனில்குமாரை மது போதையில் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நான்கு பேர் ஜூலை 20 இரவில் ரோட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு ரோந்து சென்ற மூணாறு எஸ்.ஐ. அனில்குமார் தலைமையிலான போலீசார் பொது இடத்தில் மது அருந்தியது குறித்து கேட்டனர். மது போதையில் இருந்தவர்கள் எஸ்.ஐ.,யை தாக்கினர். இச்சம்பவத்தில் பள்ளிவாசல் எஸ்டேட், பவர் ஹவுஸ் டிவிஷனைச் சேர்ந்த மணிகண்டன் 37, ராஜா 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
சாலையில் மது அருந்துவதை கட்டாய தடை செய்யவேண்டும்