உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது

பஹ்ரைச்: நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறியதாவது; பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே டாக்டர்கள். நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ருபைதேஹா என்ற எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. எஸ்எஸ்பியின் 42-வது பட்டாலியன் தளபதி கங்கா சிங் உதாவத் கூறுகையில், ' எல்லைக்குள் ஊடுருவிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் எந்த விசாவும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் ஹசன் அம்மான் சலீம்,35, என்பவர் பாகிஸ்தான் வம்சாவளி ஆவார். இவர் தற்போது பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார். கைது செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெயர், சுமித்ரா ஷகீல் ஒலிவியா,61. இவரது தாயார் கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர். இவர் பிரிட்டனின் குளுஸ்டர் நகரில் வசித்து வந்துள்ளார். நேபாளத்தின் நேபாள்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவமனை விடுத்த அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளனர். ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்ததற்கு சரியான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை,' என்றார். கடந்த10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Iyer
நவ 16, 2025 07:38

முதலில் அவர்கள் இருவரும் நேபாளத்திலிருந்து - IDENTIFICATION காண்பிக்காமல் - இந்தியாவிற்கு நுழைந்தது எப்படி என்று தீவிர விசாரணை செய்யவேண்டும்.


Iyer
நவ 16, 2025 07:35

இவரை தீவிர விசாரணை செய்து - வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்


Kasimani Baskaran
நவ 16, 2025 07:03

ஏற்கனவே அந்த இஸ்லாமிய பல்களை நாறிக்கொண்டு இருக்கிறது. அதே தொடர்பில் பிரிட்டனிலும் கூட வேலையை காட்ட வாய்ப்புள்ளது - அல்லது ஏற்கனவே காட்டியிருக்க வாய்ப்பு இருக்கிறது.


oviya vijay
நவ 16, 2025 07:01

டாக்டரை போட்டு தள்ள வேண்டும்...மூர்க்க மத...


KOVAIKARAN
நவ 16, 2025 05:33

கைது செய்யப்பட்டவர்களில் டாக்டர் ஹசன் அம்மான் சலீம்,35, என்பவர் பாகிஸ்தான் வம்சாவளி என்று கூறப்பட்டுள்ளதால், இந்த ஹசன் அம்மான் ஒரு டாக்டர் - பயங்கரவாதியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இவரை NIA விடம் ஒப்படைத்து நல்ல முறையில் விசாரித்து இவர் வேறு ஏதாவது சதித்திட்டங்களுடன், நேபாளம் வழியாக திருட்டுத்தனமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளாரா என்று விசாரிக்கவேண்டும். வருமுன் காப்பது நல்லது.


naranam
நவ 15, 2025 23:44

இந்த மாதிரி பெயர் கொண்ட டாக்டர்களை நினைத்தாலே பயமாக இருக்கு. ஒரு பத்து வருடம் சிறையில் அடைத்து வைப்பது அல்லது கொன்று விடுவதே நல்லது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ