உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொசுவத்தி தீ வீட்டில் பரவி உ.பி.,யில் இரு சிறுவர் பலி

கொசுவத்தி தீ வீட்டில் பரவி உ.பி.,யில் இரு சிறுவர் பலி

காஜியாபாத்: உத்தரபிரதேசத்தில், வீட்டில் கொசுபத்தி ஏற்றி வைத்தபடி துாங்கியபோது தீயில் கருகி இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.உ.பி.,யின் காஜியாபாத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் வசித்து வருபவர் நீரஜ். இவருக்கு இரு மகன்கள். நேற்று முன்தினம் இரவு நீரஜ் தன் மனைவியுடன் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், அவர்களது இரு மகன்கனான ப்ளஸ் 2 படித்து வந்த அருண் மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்த வன்ஷ் ஆகியோர் மற்றொரு அறையிலும் படுத்து துாங்கினார்.சிறுவர்கள் தங்கள் அறையில் கொசுபத்தி ஏற்றி வைத்து துாங்கினர். இரவில் சிறுவர்கள் துாங்கிய அறையில் இருந்து புகை மற்றும் தீப்பிடித்து எரிவதை அறிந்த தந்தை நீரஜ் அண்டை வீட்டார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுவர்கள் இருவரையும் மீட்டார்.அப்போது சிறுவன் வன்ஷ் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். மயங்கிய நிலையில் கிடந்த அருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ''வீட்டில் மின் தடைஏற்பட்டிருந்ததால், மகன்கள் இருவரும் படுக்கைக்கு கீழ் கொசுபத்தியை ஏற்றி வைத்து துாங்கினர். அப்போது அவர்கள் மூடியிருந்த போர்வையில் தீப்பிடித்து இருவரும் உயிரிழந்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை