மேலும் செய்திகள்
தனியார் ஓட்டலுக்கு வெடி குண்டு மிரட்டல்
03-Feb-2025
மூணாறு; மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், பைப் லைன் பகுதியில் தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றவரை தாக்கிய சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.மூணாறு அருகே குஞ்சுதண்ணி, கொச்சுப்பு பகுதியைச் சேர்ந்த பிபின் 36, நண்பர்கள் இருவருடன் பள்ளிவாசல் எஸ்டேட், பைப் லைன் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இருதினங்களுக்கு முன்பு சாப்பிட சென்றார். அப்போது உணவு தொடர்பாக கருத்து தெருவித்த பிபினுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிபின் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் குமுளியை சேர்ந்த ஷைன் 32, உடும்பன்சோலை மாட்டுதாவளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் 36, ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவரை தேடி வருகின்றனர்.இந்நிலையில் உணவு சாப்பிட வந்த பிபின் உள்ளிட்டோர் ஊழியர்களை தாக்கியதாக ஓட்டல் ஊழியர் பிரியா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Feb-2025