மின் கம்பி மீது உரசிய பஸ்; ராஜஸ்தானில் இருவர் பலி
ஜெய்ப்பூர்: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் பகுதியில் இருந்து தனியார் பஸ் ஒன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள செங்கல் சூளைக்கு, 50 தொழிலாளர்களை ஏற்றி சென்றது. அந்த பஸ்சின் மேல் சைக்கிள், காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பஸ் ஜெய்ப்பூர் அருகே மனோகர்பூர் கிராம சாலையில் சென்றபோது மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயர் திடீரென உரசியதில் பஸ் தீப் பிடித்தது. இதில் பஸ் மீது வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடித்தன. இதனா ல் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பஸ்சில் இருந்து குதித்து தப்பினர். எனினும் இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.