உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை

கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை

புதுடில்லி:டில்லியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருந்த அலுவலகம் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற இருவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெம்ராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளள ஆகாஷ் மற்றும் பீட்டர் ஜோசப் ஆகியோர், முறையே, கத்தி மற்றும் துப்பாக்கியுடன், டில்லி நகரின் முக்கிய சாலையில் இருந்த அலுவலகத்தில் பட்டப் பகலில் கொள்ளையடிக்க முயன்றனர்.எனினும், அவர்களால் விலை மதிப்பு மிக்க பொருட்கள் எதையும் கொள்ளையடிக்க முடியவில்லை.போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும், அவர்களுக்கு உதவிய முகமது யாகூப் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இருவருக்கும் தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.இதன் மூலம், இத்தகைய கொடூர குற்றத்தில் யாரும் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது. சட்டத்தின் மீதான பயம் இல்லாத அவர்கள் இருவருக்கும் உதவி புரிந்த முகமது யாகூபிற்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி ஹேம்ராஜ் உத்தரவிட்டார்.இந்த குற்றம், 2015ல் நடந்தது. பத்தாண்டுகளாக பல விதமான இழுபறிகளுக்கு பின், இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ