உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் இருந்து காசிக்கு ராமஜோதியை எடுத்து வரும் முஸ்லிம் பெண்கள்

அயோத்தியில் இருந்து காசிக்கு ராமஜோதியை எடுத்து வரும் முஸ்லிம் பெண்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ‛ கடவுள் ராமர் நமது மூதாதையர். அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏ.,வும் ஒன்று தான்' என்ற செய்தியை பரப்பும் நோக்கில் அயோத்தியில் இருந்து காசிக்கு, முஸ்லிம் மதத்தை சேர்ந்த நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் ராமஜோதியை எடுத்து வருகின்றனர்.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.,22ல் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில், ‛கடவுள் ராமர் நமது முன்னோர், இந்தியர்களின் டிஎன்ஏ.,வும் ஒன்றுதான்' என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க, நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் ராமஜோதியை எடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள், இன்று அயோத்தி செல்கின்றனர். அங்கு, இவர்களது பயணத்தை பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக்தாஸ் மற்றும் ஓம் சவுத்ரி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர். ராமஜோதியை ஷம்பு தேச்சாரியார் என்பவர், நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோரிடம் ஒப்படைக்கிறார். ராமஜோதியுடன், அவர்கள் நாளை காசியை வந்தடைகின்றனர். வரும் போது அயோத்தி மண் மற்றும் சரயு நதி புனித நீரையும் இருவரும் எடுத்து வருகின்றனர்.

யார் இவர்கள்

நஸ்னீன் அன்சாரி பனாரஸ் ஹிந்து பல்கலையில் பட்டம் பெற்றவர். ஹனுமன் சாலிசா மற்றும் ராமசரிதையை உருதுவில் மொழி பெயர்த்துள்ளார். பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக் தாசை தனது குருவாக ஏற்றுக்கொண்ட இவர், ஒற்றுமை மற்றும் அமைதிக்காக அயராது உழைத்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ‛ராம்பந்த்' என்ற அமைப்புடன் இணைந்து ராமபக்தியை பரப்பி வருகிறார்.அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் ராமர் நமது மூதாதையர். ஒருவர் தனது மதத்தை மாற்றியிருக்கலாம். ஆனால், மூதாதையரை மாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனித தலம் போல், ஹிந்துக்களுக்கும், இந்திய கலாசாரத்தை நம்புபவர்களுக்கும் அயோத்தி புனித தலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நஜ்மா பர்வீன், பனாரஸ் ஹிந்து பல்கலையில், பிரதமர் மோடி பற்றி ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக ராம பக்தியை பரப்பும் பணியில் உள்ளார். வாரணாசியை சேர்ந்த ஹிந்து முஸ்லிம் மையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார். நஸ்னீன் அன்சாரியும், நஜ்மா பர்வீனும் முத்தலாக் முறைக்கு எதிராக போராடியவர்கள். ஏராளமான முஸ்லிம் பெண்களின் ஆதரவை பெற்றவர்கள். ராமநவமி மற்றும் தீபாவளி பண்டிகை அன்று நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களுடன் இணைந்து ராம ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.ராமபந்த் அமைப்பின் தலைவர் ராஜிவ் ஸ்ரீகுருஜி கூறுகையில், நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் அயோத்தியில் இருந்து ராமஜோதியை கொண்டு வருவார்கள். ஜவுன்பூர் முதல் வாரணாசி வரை, பல இடங்களில் ராமஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். நாளை, சுபாஷ் பவன் என்ற இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ராமஜோதியை வரவேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Godyes
ஜன 07, 2024 05:52

சுதந்திரம் வாங்கிய கையில் இந்திய அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கர் தாழ்வாக வாழ்ந்தவர்களை கைதூக்கி விட சட்டம் இயற்ற போய் அதில் சிறுபான்மை இன பாதுகாப்பு என்ற கோடரி வார்த்தையை சேர்த்து விட்ட புத்திசாலிகள் ஜன நாயக தேர்தல் முறைகளில் அதை சாதகமாக பயன்படுத்தி இந்துக்களை அழிப்பார்கள் என்பதை கருதவில்லை


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2024 02:10

நடப்பது எல்லாம் பார்த்தால் திராவிஷ ஊ பிஸ் களுக்கு அடி வயரு கலங்கி விட்டுருக்கும்.


Ramesh Sargam
ஜன 07, 2024 00:34

இதுதான் ஹிந்து மதத்தின் மகிமை. ஹிந்து மதத்தில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்ப்பதில்லை. ஹிந்து மதத்தை பற்றி அறிந்தவர்கள், உதாரணமாக இந்த இரு பெண்களும் - முஸ்லிம் மதத்தை சேர்ந்த நஸ்னீன் அன்சாரி மற்றும் நஜ்மா பர்வீன் ஆகியோர் - ஹிந்து மதத்தை பற்றி நன்றாக அறிந்து ஹிந்து மதத்தை ஆதரிக்கின்றனர். ஹிந்து மதம் உலகில் உள்ள அனைவருக்கும் பொருத்தமான மதம். ஹிந்து தர்மம் உலகம் போற்றும் ஒரு தர்மம்.


Gopalan
ஜன 06, 2024 22:02

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை உலகமே கொண்டாடி வருகிறது. இந்தியாவில் முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போது பல இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவார்கள் என்று தெரிகிறது.


Seshan Thirumaliruncholai
ஜன 06, 2024 19:07

வெளிநாட்டினர் படையெடுப்பு வியாபார நோக்கில் பாரத தேசம் வருவதற்கு முன் பகவான் ராமனாக அவதாரம் செய்துள்ளார். மதமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சர்ச்சை இப்போது தேவையற்றது. பாரத தேச மக்களுக்கு ராமன் அவதார புருஷோத்தமன் தான். மதம் இனம் கருதாமல் தேசிய உணர்வுடன் எல்லோரும் கொண்டாடுவதில் வியப்புஇல்லை


K.Muthuraj
ஜன 06, 2024 19:35

பொதுவாக இறை அவதாரம் என்றாலோ இறைதூதர் என்றாலோ இறைமகன் என்றாலோ அவர்கள் மக்களிடம் நிறைய மாஜிக் செய்திருக்க வேண்டும். நிறைய பேரை குணப்படுத்தியிக்க வேண்டும். செயற்கரிய விஷயங்களை செய்திருக்க வேண்டும். அற்புத விஷயங்கள் கருணை சார்ந்த விஷயங்கள் அவர்கள் வாழ்வில் பின்னியிருத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான எதிர்காலம் பற்றி போதித்திருக்க வேண்டும். (ஆனால் வரலாற்று உண்மை என்னவென்று நமக்கு தெரியாது) ஆனால் கிருஷ்ணா வரலாற்றையோ ராமர் வரலாற்றையோ அவ்வளவு ஏன் புத்தர் வரலாற்றினையோ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையினையோ படித்தால் அவ்வாறு இருக்காது. அவர்களின் வாழ்வு உலர்ந்து சாறு இன்றி இருக்கும். இயல்பான ஒரு மன்னனுக்குரிய செயல்பாடுகளே அவர்கள் வாழ்வில் நிகழ்த்தியிருப்பார்கள். (புராணங்களே அவர்களை அவ்வாறு மாஜிக் செய்பவர்கள் போன்று வர்ணித்தன) அப்படியெனில் அவர்களை எது அவதாரமாக கருத தூண்டியது? ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2024 20:19

ஹிந்து மதத்தில் இறைவனது அவதாரங்கள் உதாரண புருஷர்களாக வாழ்ந்து காட்டவே ஏற்பட்டன. அற்புதங்களை நிகழ்த்தி மக்களைக் கவர அல்ல. பாலைவன மதங்களில் சுவனமே (சொர்க்கம்) மக்கள் பெறக்கூடிய அதிகபட்ச நற்பேறு. ஆனால் சனாதனத்திலோ மோட்சம் மட்டுமே மக்கள் பெறக்கூடிய அதிகபட்ச நற்பேறு. இரண்டிலும் நோக்கம் வேறு. கொள்கை வேறு.


இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 06, 2024 18:54

Jai Sriram


வெகுளி
ஜன 06, 2024 18:25

உதைனா மானஸ்தராச்சே... இந்த செய்தி அவர் கண்ணுல படாம பாத்துக்குங்க...


Ranga
ஜன 06, 2024 18:18

அருமை அருமை வாழ்துக்கள் சகோதரிகளே..


sridhar
ஜன 06, 2024 20:52

இங்கேயும் இருக்குதே சிலது , Raman எந்த கல்லூரியில் படித்தான் என்று கேட்டுண்டு .


Bala Sekar
ஜன 06, 2024 17:28

0 ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை