உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு வேறு விபத்துகளில் மாணவன் உட்பட இருவர் பலி

இரு வேறு விபத்துகளில் மாணவன் உட்பட இருவர் பலி

பாலக்காடு; கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இரு விபத்துகளில், கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி கம்மாந்தரை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் முகமது அன்சல், 21, கோவையில் தனியார் கல்லூரியில் பி.டெக்., படித்து வந்தார்.இந்நிலையில், இவர் நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக, கல்லூரிக்கு ஸ்கூட்டரில் கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார். காலை, 8:00 மணியளவில் கஞ்சிக்கோடு அருகே, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், அன்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த புதுச்சேரி (கசபா) போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பாலக்காடு மாவட்டம், மங்கலம் வீட்டிக்கல்கடவு பகுதியை சேர்ந்த நமசிவாயத்தின் மகன் சிவராசன்ல, 28, கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து, இரவு, 9:45 மணிக்கு, குழல்மன்னம் பகுதியிலிருந்து, பாலக்காடு நோக்கி பைக்கில் சென்றார்.கண்ணனூர் அருகே சென்ற போது, பெங்களூருக்கு செல்லும் தனியார் பஸ் பைக்கில் மோதியது. இதில் சிவதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இரு விபத்துகள் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை