உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்; துப்பாக்கிகள் பறிமுதல்

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்; துப்பாக்கிகள் பறிமுதல்

சண்டிகர்: பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் விடுதலைப் படையுடன் தொடர்பில் இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, ஐந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: அமிர்தசரஸ் மாவட்டம் தாரிவால் கிராமத்தில் கடந்த 1ம் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்த மல்கித் சிங்கை, இருவர் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலை நடத்தியது தாரிவால் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம்ஜித் சிங் மற்றும் சாய்ஸ்ரா கலன் கிராமத்தைச் சேர்ந்த கரன்வீர் சிங் ஆகியோர் என்பதும், இருவரும் காலிஸ்தான் விடுதலைப் படையுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ராஜா சான்ஸி கிராமத்தில் 2018ம் ஆண்டு மதத் தலத்தில் கையெறி குண்டுகளை வீசியதும் விக்ரம்ஜித் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தாரிவால் கிராமத்தில் உள்ள குருத்வாரா சாஹிப் அருகே விக்ரம்ஜித் சிங்கை, சுற்றிவளைத்துக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குக்ரன்வாலா அருகே அட்டாவில் பதுங்கியிருந்த கரன்வீர் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு கைத்துப்பாக்கிகள், நம் நாட்டில் சட்டவிரோதமாக தயாரித்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை