உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.850 கோடி நிதி மோசடி: ஹைதராபாதில் இருவர் கைது

ரூ.850 கோடி நிதி மோசடி: ஹைதராபாதில் இருவர் கைது

ஹைதராபாத்: நிதி நிறுவனம் துவக்கி, 850 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், இருவரை தெலுங்கானா போலீசார் நேற்று கைது செய்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாதில் கடந்த 2021ல் 'பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ்' என்ற நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. 'கேபிடல் புரொடெக் ஷன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங் பிளாட்பார்ம்' என்ற துணை நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. குறுகிய கால வைப்புத் தொகைக்கு அதிக வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர். வசூலிக்கப்பட்ட 1,700 கோடி ரூபாயில், சில நுாறு கோடி ரூபாய் பழைய முதலீட்டாளர்களுக்கு திருப்பி தரப்பட்டது. கடந்த ஜனவரியுடன் நிறுவனங்கள் மூடப்பட்டதால், முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து ஹைதராபாத் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் அமர்தீப் குமார், உயர் பொறுப்பில் இருந்த ஆர்யன் சிங், யோகேந்தர் சிங் உட்பட 19 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கேபிடல் புரொடெக் ஷன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் பவண் குமார், பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங் பிளாட்பார்ம் நிறுவனத்தின் தலைவர் காவ்யா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், 850 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டனர்.'சேகரிக்கப்பட்ட தொகை பல்வேறு போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

canchi ravi
பிப் 17, 2025 13:07

மிக விரைவில் நியாயம் கிடைக்கவேண்டும். அயோக்கிய மோசக்காரர்களை விடக்கூடாது


Ramesh Sargam
பிப் 17, 2025 13:06

மக்களின் பேராசையை நன்றாக பயன்படுத்தி இப்படி பலர் நிதி நிறுவனங்கள் துவங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி நேற்று, இன்றைக்கா நடக்கிறது? காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. முதலில் மக்கள் பேராசை படுவதை விடவேண்டும். எளிமையான வாழ்க்கையை வாழ பழகவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மொத்தமாக கொடுத்து ஏமாறவேண்டும்.


venugopal s
பிப் 17, 2025 11:39

இந்த வடக்கன்கள் எங்கே போனாலும் பொய் புரட்டு பித்தலாட்டம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்!


Kalyanaraman
பிப் 17, 2025 08:19

நமது முதுகெலும்பில்லாத ஆண்மை இல்லாத சட்டங்களால் தான் இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடும் தண்டனையும் விரைவான விசாரணை இருந்தால் மட்டுமே இது போன்ற குற்றவாளிகள் குறைவார்கள். மாறாக, தாமதமான விசாரணை பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டு போவதால் இதுபோன்ற குற்றவாளிகளுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் அனுகூலமாக நமது சட்டங்களும் நீதிமன்றங்களுமே இருப்பது அவமானத்துக்குரியது.


VENKATASUBRAMANIAN
பிப் 17, 2025 07:10

மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அரசும் இது போன்றவர்களை கண்காணிக்க வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 17, 2025 07:00

திராவிட தொடர்புகளை வைத்து தொழில் நுணக்கத்தை கற்றிருந்தால் இது போல பிரச்சினை வந்திருக்காது.


நிக்கோல்தாம்சன்
பிப் 17, 2025 05:59

கல்வித்தந்தைகள் ஆகி ,மெத்து கடத்தி அயலக பொறுப்பை வாங்கி , சினிமா ப்ரொடியூஸ் பண்ணி சிவப்பு நிறுவனத்துக்கு விற்றிருந்தா இந்நேரம் மோசடி செய்தார்கள் என்று செய்தி வந்திருக்குமா காவ்யா பெண்ணே


பல்லவி
பிப் 17, 2025 05:52

Plan super அதுவும் கொள்ளை அடிக்க


சுரேஷ்நாயுடு
பிப் 17, 2025 04:29

ஒரு கோடி ரெண்டு கோடி இல்லை. ஆயிரம்.கோடி கணக்கில் ஏமாத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. சாதனைதான்.


J.V. Iyer
பிப் 17, 2025 04:13

இவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாக மோசடி செய்யத்தெரியவில்லை இப்படி செய்ய இவர்கள் தமிழகத்தில் ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாமே? நிறைய பீஸ் வாங்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை