உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை: மும்பையில், ஏர் இந்தியா விமானம் கிளம்பிய ஓடுபாதையில், இண்டிகோ விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கிளம்பி மேலே பறக்க கிளம்பியது. அந்த நேரத்தில், அதே ஓடுபாதையில், அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து ம.பி., மாநிலம் இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1mjvn2e7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டு விமானங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவாக தான் இருந்தது. ஏர் இந்தியா விமானம் கிளம்பி சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. நேற்று( ஜூன் 08) நடந்த இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூரில் இருந்து வந்த விமானம், விமான நிலையத்தில் அனுமதி கிடைத்த உடன் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

துரை
ஜூன் 09, 2024 17:10

இன்னும் 450 பிளேன்களுக்கு ஆர்டர் குடுத்திருக்கம்ல. ஷேர் ஆட்டோமாதிரி விமானம் ஓட்டப்போறம்ல.


Bye Pass
ஜூன் 09, 2024 14:32

ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் வரிசையாக மூன்று அல்லது நான்கு விமானங்கள் ஓன்றன்பின்றாக தரையிறங்க அணிவகுத்திருப்பதை காணலாம்


Suppan
ஜூன் 09, 2024 13:25

மும்பை விமான நிலையத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று விமானங்கள் இறங்குகின்றன/ கிளம்புகின்றன .


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ