உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1 லட்சம் செலுத்தி ஜாமின் வாங்கிய உதயநிதி

ரூ.1 லட்சம் செலுத்தி ஜாமின் வாங்கிய உதயநிதி

பெங்களூரு: சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் உதயநிதி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதம் பெற்று, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.சென்னையில் கடந்தாண்டு செப்டம்பர் 2ம் தேதி, சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும்' என்றார்.இதற்கு, நாடு முழுதும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வகையில், உதயநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த பிப்ரவரியில் வழக்கு தொடர்ந்தார்.மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நால்வரையும் நேரில் ஆஜராகும்படி, ஜூன் 3ம் தேதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.இதற்கிடையில், தங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நால்வர் தரப்பிலும், கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில், பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சிவகுமார் முன்னிலையில், அமைச்சர் உதயநிதி நேற்று ஆஜரானார். அவரது சார்பில், வழக்கறிஞர்கள் பாலாஜி சிங், வில்சன், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தர்மபால் ஆகியோர் ஆஜராகினர். உதயநிதி சார்பில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், ஜாமின் கோரியும் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வில்சன் வாதாடுகையில், ''உதயநிதி நேரில் ஆஜராகி உள்ளார். அவர் மீது நாட்டில் பல இடங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர், ஒரு மாநிலத்தின் அமைச்சர். எனவே, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது,'' என்றார்.நீதிபதி சிவகுமார் கூறுகையில், ''விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்ததற்கான உத்தரவு நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், நிரந்தர விலக்கு அளிப்பது குறித்து பார்க்கலாம். ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதம் செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார்.இதன்படி, 1 லட்சம் ரூபாய் உத்தரவாதம் செலுத்தி, உதயநிதி ஜாமின் பெற்றார். பின், அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

konanki
ஜூன் 26, 2024 22:59

வில்சன் அப்பாவு எஸ்ரா சற்குணம் ஜெகத் காப்பர் திராவிட சித்தாந்த காப்பாளர்கள்


konanki
ஜூன் 26, 2024 22:51

வில்சன் தான் மூல காரணம்


konanki
ஜூன் 26, 2024 22:50

சோனியா காந்தி ராகுல் காந்தி பி சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் வரிசையில் இளவரசர். இது தான் ஜனநாயகம் என்றால். நமக்கு இது தேவையா??


Kannan
ஜூன் 26, 2024 21:52

நாட்டிலேயே பெரிய ,பழமையான ,சிறந்த கொள்கைகளை கொண்ட மதமான இந்துமதத்தை எதிர்ப்பதால் பிரதமரே ஆனாலும் ஆஜர் செய்ய வேண்டும் .


rama adhavan
ஜூன் 26, 2024 17:51

சவுக்கு சங்கருக்கு கோர்ட் மாற்றி கோர்ட் வழக்கு. இவருக்கு எல்லா வழக்குகளும் ஒரே கோர்ட். சட்டத்தின் விந்தை இதுதான். அரசியல்வாதிக்கு தனி நீதி. என்ன சட்டமோ.


Dharmavaan
ஜூன் 26, 2024 22:59

நாட்டின் நீதியின் பாரபட்சம் அப்படி கேட்பாரில்லை


Mani . V
ஜூன் 26, 2024 17:19

ஆமா, இவ்வளவு பெரிய தொகையை இந்த பரம ஏழை எப்படிக் கட்டினார்? பலப், பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து வைத்துள்ளவர்களுக்கு ஒரு லட்சம் எல்லாம் சுஜீபி. நீதிமன்றமும், பணக்காரர்களும் சேர்ந்து நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். "நான் அடிப்பது மாதிரி நடிக்கிறேன். நீ அழுவது மாதிரி நடி" என்று.


Narayanan
ஜூன் 26, 2024 17:02

வில்சன் ஒரு வக்கீல் . உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்திருக்கிறது என்று சொல்பவர் அந்த நகலை கொண்டுபோய் இருக்கவேண்டாமா ? இவர்களே உருவாக்கி கொண்டுசெல்வார்கள்போல் இருக்கிறது .


Narayanan
ஜூன் 26, 2024 16:57

வக்கீல்கள் இப்படித்தான் பொய் சொல்லி வாழ்வார்கள் . உதய நிதி ஒரு அமைச்சராம் முதல்வர் கேஜ்ரிவாலே சிறையில் இருக்கிறார் . உதயநிதி சாதாரண அமைச்சர்தானே ஏன் விலக்கு அளிக்கவேண்டும் ?


karutthu
ஜூன் 26, 2024 15:22

இவருக்கு ஒரு லக்ஷம் போதாது .ஒரு கோடி ரூபாய் ஜாமீன் வழங்க உத்தரவிட்ருக்க வேண்டும் இவருக்கு கோடி கணக்கில் பணம்உள்ளது . .


V GOPALAN
ஜூன் 26, 2024 14:24

1000 crores is one


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி