உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல்வர் ரெட்டி கண்டனம்

சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல்வர் ரெட்டி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ‛‛ சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா மாநில முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‛மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் குவிந்தது. உதயநிதிக்கு எதிராக ஹிந்து முன்னணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி ஆங்கில டிவி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். அப்போது உதயநிதி பேச்சு குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் : ‛‛சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. தெலுங்கானா முதல்வராகவும் மாநில காங்கிரஸ் தலைவராகவும், உதயநிதியின் பேச்சு தவறு என எனக்கூறுகிறேன். அதற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதுடன், இடையூறு செய்யாமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார். தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

V RAMASWAMY
ஏப் 23, 2024 19:37

தற்பொழுது மதுரையில் நடந்துகொண்டிருக்கும் லட்சோப லட்ச பக்தர்கள் கலந்து கொள்ளும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் மைக் போட்டு அவர்களின் சனாதன எதிர்ப்பு கொள்கையை தைரியமிருந்தால் சொல்லட்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 23, 2024 10:16

தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை காத்திருந்து, இப்போது தெலுங்கானா தேர்தலுக்கு முன் அறிக்கை விடுகிறார் அதாவது திமுகவிற்கு பாதகம் இல்லாமலும், காங்கிரசுக்கு பாதுகாப்பாகவும் இரட்டை நிலைப்பாடு கம்மிகள் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஆதரவும், கேரளாவில் எதிர்ப்பும் செய்வது போல கர்நாடகாவில் இளம் இந்துப்பெண் கல்லூரி வளாகத்திலேயே அனைவர் முன்னிலையில் குத்தி கொல்லப்பட்டாலும் வாயை திறக்காத காங்கிரஸ், மணிப்பூரில் நடக்கும் போதை உற்பத்தி செய்யும் வன்முறை கூட்டத்திற்கு ஆதரவு மொத்தத்தில் இந்துக்களின் ஓட்டு வேண்டும் ஆனால் அவர்களின் நலனில் அக்கறை கிடையாது


Barakat Ali
ஏப் 21, 2024 11:25

சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசி ஆறு மாதங்கள் ஆச்சு இப்போது வாய் திறக்கிறார் அப்போது மௌனம் சாதித்தார்? ஏனெனில் அவர் தெலுங்கானாவில் சிறுபான்மை வாக்குகளில் கவனமாக இருந்தார்


Shivaji
ஏப் 21, 2024 09:07

அவன் பிறந்த இடம் அப்படி இவனைபோய் விளையாட்டுத்துரை அமைச்சர் சந்தி சிறிக்குது கோமாளி ஆட்சி


R.RAMACHANDRAN
ஏப் 21, 2024 07:08

வாக்கு வங்கிக்காக சாதி மத அடிப்படையில் இந்த நாட்டில் தொடரும் கொடுமைகளை பார்த்துக்கொண்டு மக்கள் சமரசமாக செல்ல வேண்டும் என்கின்றனர் கொடுமைகள் செய்பவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருப்பதால்


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2024 06:28

வாயால் வளர்ந்த கட்சி வாயாலேயே அழியும்.


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2024 06:25

திமுக வாயால் மட்டுமே வளர்ந்த ரவுடி கும்பல் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது


Ramesh Sargam
ஏப் 20, 2024 20:32

தைரியமிருந்தால் உதயநிதி ஆந்திரா, தெலங்கானா பக்கம் போனால் கட்டாயம் ...விழும்


Nesan
ஏப் 20, 2024 19:36

தமிழக தேர்தல் வரை சனாதன எதிர்ப்பை ஆதரித்த காங்கிரஸ் தேர்தல் முடிந்தவுடன் சனாதன தர்மத்திற்கு வால் பிடிப்பது கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியல்


DARMHAR/ D.M.Reddy
ஏப் 20, 2024 19:10

உதயநிதி தனக்கு எல்லாம் தெரிந்தது போல அதாவது ஹிந்து தர்ம மறை நூல்களை எல்லாம் படித்து தேர்ந்தவர் போல பிதற்றுவதே இவர் வழக்கம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை