உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் 40 விமானங்களை தகர்த்தது உக்ரைன்

ரஷ்யாவுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் 40 விமானங்களை தகர்த்தது உக்ரைன்

கீவ் : மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022 பிப்ரவரியில் போர் தொடர்ந்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், நிபந்தனைகளுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.

பெரிய சேதம்

இதனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக, இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.இந்நிலையில், உக்ரைன் நேற்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவுக்குள் புகுந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில், ரஷ்யாவின் விமானப் படைக்கு சொந்தமான 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உக்ரைனில் இருந்து, 4,300 கி.மீ., தொலைவில் உள்ள ரஷ்யாவின் இர்குட்ஸ் ஓப்லாஸ்டின் பேலயா விமானப் படை தளத்தின் மீது, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தின.இதைத் தவிர, உக்ரைனில் இருந்து, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள ரஷ்யாவின் முர்மான்ஸ்க் ஓப்லாஸ்டின் ஓலன்யா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான, மிகவும் விலை உயர்ந்த போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது.

போர் நிறுத்தம்

ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, ராணுவ அமைச்சர் ரஸ்தம் உமரோவை அனுப்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்தார்.இதற்கு சில மணி நேரங்களில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sekar
ஜூன் 02, 2025 10:47

நாளை இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கும் இருக்கும் நிலையில் இது ரஷ்யா எதிர்பார்த்திராத தாக்குதல் போல் தெரிகிறது. உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் சுதாரிக்கும் முன்பே அந்த நாட்டினை கைப்பற்றி இருக்க வேண்டும். இங்கு புடின் தவறு செய்து விட்டது போல் தெரிகிறது. நம் நாட்டில் ஏவப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் பயங்கரவாதிகளின் மேல் தாக்கினாலும் இந்தியா நாமும் நமது எதிரிகளிடம் எப்பொழுதும் 24x7 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


hasan kuthoos
ஜூன் 02, 2025 09:05

அநேகமாக இத்துடன் உக்ரைன் கதை யை ரஷ்யா முடித்துவிடும்


புதிய வீடியோ