உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாயுடுவுக்கு நான்கு நிதிஷூக்கு இரண்டு : அமைச்சரவையில் இடம்?

நாயுடுவுக்கு நான்கு நிதிஷூக்கு இரண்டு : அமைச்சரவையில் இடம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்தியஅமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு அமைச்சர் பதவிகளும் , நிதிஷூக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நடந்து முடிந்த தேர்தலின் மூலம் முன்னாள் பிரதமர் நேருவின் பதவிகாலத்தை சமன் செய்யும் வகையில் மூன்றாவது முறையாக நாளை ( 09-ம் தேதி ) இரவு 7.15 மணியளவில் பிரதமராக பதவியேற்க உள்ளார் மோடி. அவருடன் கூட்டணி கட்சி எம்.பிக்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே யார்யாருக்கு எந்த துறை பகிர்ந்து அளிப்பது என கூட்டணி கட்சிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டணியில் இரண்டாவதாக அதிகம் இடம் வென்ற சந்திரபாபு நாயுடுவுக்கு 4 இடங்கள் வரையில் மத்திய அமைச்சரவை இடம் வழங்கப்படலாம் எனவும் , அடுத்த இடம் பிடித்துள்ள நிதிஷூக்கு இரண்டு இடங்களும் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.அமைச்சர்களின் எண்ணிக்கையை முடிவு செய்துள்ள அதே நேரத்தில் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற கூடும் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி சந்திபாபு நாயுடு கட்சியை சேர்ந்த நான்கு பேரில் மூன்று பேர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ராம் மோகன் நாயுடு, ஹரிஷ்பாலயோகி மற்றும் தக்குமல்ல பிரசாத் ஆகியோர் ஆவர்.அதே போல் நிதிஷ் கட்சியில் இடம் பெற்றுள்ளவர்கள் கட்சியின் மூத்ததலைவர் களாவர் அவர்கள் முறையே லாலன்சிங் மற்றும் ராம் நாத் தாகூர் ஆகியோர். இவர்களில் லாலன்சிங் தற்போது எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மற்றொருவரான ராம்நாத் தாகூர் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார் இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தற்போது பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்குட்பட்டவருமான கர்பூரி தாகூரின் மகனாவார். அமைச்சர் பதவி குறித்து பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நேரத்தில் இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் திடீரென வெளியேறியதை நினைவில் கொள்ள வேண்டும் பா.ஜ., கட்சியினர் கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜானகி ராம், குண்டூர்
ஜூன் 09, 2024 10:27

அப்படியே நாலு வந்தே பாரத் ரயிகளுக்கு கொடிகாட்டும் உரிமையையும் கேட்டு வாங்குங்க.


Rpalnivelu
ஜூன் 08, 2024 21:36

நம்ம ஜூனியர் கட்டுக்கு வயிறு எரியுமே. பேராசையும் துரோகத்தையும் ஒருங்கே கொண்ட எடப்பாடியை அதிமுக தலைகள் ஒதுக்கி வைத்திருந்தால் நாயுடு இருக்கும் இடத்தில் அதிமுக இருந்திருக்கும்


GMM
ஜூன் 08, 2024 21:18

நாயுடு, நிதிஷ் அமைச்சர் அவையில் சேராமல் இருப்பது நல்லது. இனி நீதிமன்றம் ஊழல் தவறை திருத்த விரும்பாது. திமுக செந்தில் பாலாஜி, ஆம் ஆத்மி கெஜ்ரிவால் விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் தன் அதிகாரத்தை நிரூபித்து விட்டன. பொன்முடி விவகாரம் சட்ட பேரவை தீர்மானம், உச்ச நீதிமன்றம் விசேஷ தலையீடு தேவைப்பட்டது. கவர்னர் அதிகாரம் நீதிமன்றக்கு புரிந்து இருக்கும். காங்கிரஸ் மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று கூறி வெற்றி பெற்று விட்டது. இனி குற்றம் புரிந்தவர் முன்பு போல் மிரட்ட முடியாது. எந்த குழப்பமும் இருக்காது?


Iniyan
ஜூன் 08, 2024 20:10

நிதிஷ் மற்றும் நாயுடு இருவருமே நம்பிக்கை துரோக சுயநல வாதிகள்


Ramesh Sargam
ஜூன் 08, 2024 19:38

ஒருவழியா தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது. இனி பிரச்சினை, எந்த கூட்டணியினருக்கு எவ்வளவு மந்திரி பதவி என்பதுதான்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை