உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோஷம் போடாத இளைஞர்கள் மத்திய அமைச்சர் கோபம்

கோஷம் போடாத இளைஞர்கள் மத்திய அமைச்சர் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: கேரளாவில் நேரு யுவ கேந்திரா ஏற்பாடு செய்த இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்தினர், 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்பாததால் கோபம்அடைந்தார்.கேரளாவின் கோழிக்கோடில் நேரு யுவ கேந்திரா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இணைந்து இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி நேற்று துவங்கி வைத்து பேசினார்.தன் பேச்சை முடித்த பின்னர் இரு கைகளையும் உயர்த்தி, 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு இளைஞர்கள் தரப்பில் இருந்து பதில் கோஷம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் பாரதம் உங்கள் தாய் இல்லையா, அதில் சந்தேகம் உள்ளதா, உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டாமா என கூறிவிட்டு, முழக்கத்தை திரும்ப சொன்னார். அப்போதும் கூட்டத்தில் ஒரு பகுதியினர் அமைதியாக இருந்தனர். இதனால் கோபம்அடைந்த அமைச்சர், “ஏன் இந்த அணுகுமுறை? தேசத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை” என கூறிவிட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

J.Isaac
பிப் 04, 2024 21:27

மலையாளத்தில் சொல்லியிருந்தால் சொல்லியிருப்பார்கள். அனைத்து துறைகளிலும் பிராந்திய மொழிகளுக்கு பதிலாக மறைமுகமாக ஹிந்தி திணிக்கப்படுகிறதே..


J.Isaac
பிப் 04, 2024 20:02

மலையாளத்தில் சொல்லியிருந்தால் ,பதில் சொல்லியிருப்பார்கள்.


g.s,rajan
பிப் 04, 2024 19:06

கோஷம் போட்டா அவர்களுக்கு தேச பக்தி இருக்குன்னு அர்த்தமா ...???


DVRR
பிப் 04, 2024 18:34

முஸ்லிம்களுக்கு பெண் என்றால் ஒரு பிள்ளை பெறும் மற்றும் வீட்டு வேலை செய்யும் ஒரு ரோபோட் ஆகவே அவர்கள் பாரத் மாதா கி ஜெய் ஹோ சொல்லவே மாட்டார்கள்???பாரத் பிதா கி ஜெய் ஹோ சொல்லுங்கள் உடனே சொல்வார்கள்


Sakthi Parthasarathy
பிப் 04, 2024 18:07

படித்தவர்கள் எப்போதும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்..


Sck
பிப் 04, 2024 15:04

கேரளாவில் இருக்கும் மலையாள இந்துக்கள் வளைகுடா நாட்டில் வேலை கிடைக்க மதமாறி கிட்டதட்ட அரை நூற்றாண்டு ஓடிவிட்டது என்றுக் கூடவா அமைச்சருக்கு தெரியாது. இஸ்லாமிய கிறிஸ்துவ மாநிலத்தில் பாரத் மாதாக்கீ ஜெய் என்று சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பது தவறு.


g.s,rajan
பிப் 04, 2024 15:01

டாஸ்மாக்குக்கு போகணும்னா சும்மா இல்லை வருமானம் வேணாமா ...???


g.s,rajan
பிப் 04, 2024 14:45

தமிழ்நாட்டு இளைஞர்கள் தான் டாஸ்மாக்குக்கு அடிமையா இருக்காங்க என்று பழி கூறும் வேளையில், நன்கு படித்த கேரள இளைஞர்களின் ரத்தத்திலும் ஆல்கஹால் ஓடுதா...??? புரியலையே ....அவர்களிடம் ஏன் தேச பக்தி இல்லை ...???


g.s,rajan
பிப் 04, 2024 14:13

உங்களுக்கு அமைச்சர் பதவி முடிந்தாலும் பென்ஷன் கிடைக்கும் ,வேலை இல்லாத இளைஞர்களுக்கு என்ன கிடைக்கும்...???பாரத தேசம் விரக்தியில் இருக்கும் அவர்களை ஏன் காப்பாற்றவில்லை ...???


Saravanan Kumar
பிப் 04, 2024 12:12

கலந்து கொண்ட அனைவரும் மர்ம நபர்களாக இருக்கும் அவர்களுக்கு இந்தியாவிற்கு எதிராக செயல் பட்டு தான் பழக்கமே ஒழிய இந்தியாவிற்கு ஆதரவாக செயல் பட மாட்டார்கள் இந்தியாவின் புற்றுநோய்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ