உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கடந்தாண்டு டிசம்பரில் நான் அமெரிக்கா சென்றது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி உள்ளார்,'' என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.ராகுல் கூறியதை மறுத்து ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன். நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன். மேலும், அங்கு நடந்த இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நான் தங்கியிருந்த காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை. நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். ராகுலின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்.இவ்வாறு ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nava
பிப் 04, 2025 15:04

அரை வேக்காட்டு கோமாளியிடம் வேறு எதிர்பார்க்க முடியும்


Indian
பிப் 04, 2025 14:05

மொதல்ல தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டு வந்து பேசுங்க .....


கண்ணன்
பிப் 04, 2025 11:40

முறையான படிப்பறிவற்ற மனநலம் குன்றியவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்


மணி
பிப் 04, 2025 09:10

இத்தாலி கோமாளி


anantharaman
பிப் 04, 2025 08:23

இந்த ராகுல் மீது ஏன் சட்டப் படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறீர் ஐயா?


Bhakt
பிப் 03, 2025 21:51

வெளிநாட்டு லோடு. அதோட நோக்கம் பாரதத்தை அழிக்க வேண்டும்.


vadivelu
பிப் 03, 2025 21:17

ஒரு ரூபாய் இழந்த சாதாரண மனிதனே அரசை வெறுத்து விமரிசிக்கும் போது , பல கோடி சைபர்களை போடும் அளவிற்கு இழந்த.வர கன்டம் த்தைத்தான் பேசுவார்.


Dharmavaan
பிப் 03, 2025 20:58

தகவல் என்ன தெளிவாக சொல்லவும்


S.L.Narasimman
பிப் 03, 2025 20:07

தெற்கே ஒரு பப்பின்னா வடக்கே இரு பப்பி. இரண்டு பேர்களும் பொய் பித்தலாட்டம் தவிர ஒன்னும் தெரியாத ..முட்டைகள்


இந்தியன்
பிப் 03, 2025 19:19

உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை