| ADDED : அக் 13, 2025 08:01 PM
புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகானைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், பாஜ தலைவருமான நட்டாவும் சுதேசி தயாரிப்பான ஸோகோ நிறுவனத்தின் இமெயிலுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார்.உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து நமது நாட்டில் உருவான ஸோகோ நிறுவனத்தின் இமெயில், அரட்டை செயலி மற்றும் அதன் தயாரிப்புகள் இந்தியளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் அதனை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதனால், அந்த செயலிகளின் பதிவிறக்கம் லட்சக்கணக்கில் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வும் ஸோகோவுக்கு மாறியதாக அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் ஸோகோ இமெயிலுக்கு மாறியதாக கூறியிருந்தனர். இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டாவும் ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம். எனது இமெயில் தொடர்புகளுக்கு, உள்நாட்டு தயாரிப்பான ஸோகோ மெயிலுக்கு மாறிவிட்டேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது புதிய இமெயில் முகவரி:Jpnadda. Zohomail.In. வருங்காலத்தில் இந்த இமெயில் முகவரியை பயன்படுத்துங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நட்டா தெரிவித்துள்ளார்.