உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஒற்றுமை; பஞ்சாபில் சண்டை: ஆம்ஆத்மியை சாடிய மத்திய அமைச்சர்

டில்லியில் ஒற்றுமை; பஞ்சாபில் சண்டை: ஆம்ஆத்மியை சாடிய மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆம்ஆத்மி காங்கிரசுடன் டில்லியில் ஒன்றாக இருப்பார்கள், ஆனால் பஞ்சாபில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பார்கள்' என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையே சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை தவிர்க்க முடியவில்லை. இது நரகத்திற்கு செல்லும் பாதை ஆகும். தங்கள் சொந்த வாக்காளர்களின் கண்களைக் கட்ட முயல்பவர்கள். டில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் அதன் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பல வழக்குகளில் சிக்கியதால், தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இந்த செயலிழந்த கூட்டணியின் மிகவும் சுவாரஸ்யமானவை என்னவென்றால், அவர்கள் டில்லியில் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் பஞ்சாபில் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை