உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு

வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு

புதுடில்லி: தேசியப் பாடலான, வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, டில்லி சட்டசபை வளாகத்தில் கல்வெட்டை சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று திறந்து வைத்தார். டில்லி சட்டசபை வளாகத்தில், வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு கல்வெட்டை சபாநாயகர் விஜேந்தர் குப்தா திறந்து வைத்து பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரையும் தாய்நாட்டின் உணர்வோடு இணைக்கும் காலத்தால் அழியாத பாடல். அழியாப் புகழ் பெற்ற இந்தப் பாடலையும், நம் நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசிய உணர்வை ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ