உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயிடம் செல்லாமல் கடத்தல்காரனை கட்டிப்பிடித்து அழுத குழந்தை: ஜெய்ப்பூரில் பாசப்போராட்டம்

தாயிடம் செல்லாமல் கடத்தல்காரனை கட்டிப்பிடித்து அழுத குழந்தை: ஜெய்ப்பூரில் பாசப்போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: குடும்ப பிரச்னை காரணமாக தனது உறவினரின் குழந்தையை கடத்தியுள்ளார் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர். 14 மாதங்களாக அவருடன் வளர்ந்த குழந்தையை மீட்டு தாயிடம் கொண்டு சேர்க்கும்போது, தாயிடம் செல்ல மறுத்து கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் 2 வயது குழந்தை அழுத சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தலைமை போலீஸ் கான்ஸ்டபிள் தனுஜ் சாஹர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இவர், கடந்த 2023, ஜூன் 14ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் பிருத்வி என்ற 11 மாத குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதுப்பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தனுஜை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். ஆனால், தனுஜ், நீண்ட முடி, தாடியுடன் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் குடிசை அமைத்து துறவி போல வாழ்ந்து வந்துள்ளார்.

பாசப்போராட்ம்

மற்றவர்களிடம் பிருத்வியை தனது மகன் எனக் கூறிவந்துள்ளார். சுமார் 14 மாதங்களுக்கு பிறகு அவரது இருப்பிடத்தை அறிந்த போலீசார், தனுஜை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைக்கும்போது, அவருடன் செல்ல மறுத்து பிருத்வி அடம்பிடித்துள்ளான். இதனைப்பார்த்து குற்றவாளி தனுஜூம் அழ, போலீசார் ஆச்சரியமாக பார்த்தனர். பின்னர், இவர்களின் 'பாசப்போராட்டத்தை' விலக்கிவிட்டு, தனுஜை கைது செய்ததுடன், தாயிடம் பிருத்வியை ஒப்படைத்தனர்.

மடக்கி பிடித்தது எப்படி?

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தனுஜ், விருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் துறவியாக வசித்து வந்தார். இவர் உத்தர பிரதேசத்தின் அலிகாரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்தார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அவர், முன்பு உத்தர பிரதேச போலீஸ் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாக பணியாற்றியவர். இதனால், அவருக்கு போலீசாரின் நடைமுறைகள் நன்கு தெரிந்த நிலையில், அவர் மொபைல் போனை பயன்படுத்தாமல், அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வந்துள்ளார்.அதேபோல, அவர் ஒருவரை சந்தித்தால் மீண்டும் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். தனது அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்த அவர், சில நேரங்களில் அந்தத் தாடிக்கு வெள்ளை நிறம் பூசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடத்தப்பட்ட பிருத்வியை தன் மகனாகக் கருதி வளர்த்து வந்துள்ளார். ஆகஸ்ட் 22ம் தேதி தனுஜ் சாஹரைக் கைது செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு மதுரா, ஆக்ரா, அலிகார் பகுதியில் விசாரணை நடத்தி, விருந்தாவனத்தின் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த தனுஜை கைதுசெய்ய போலீஸ் அதிகாரிகளும் துறவிகள் போல் உடையணிந்து, அப்பகுதியில் தங்கி, பக்தி பாடல்களை பாடி கண்காணித்து வந்துள்ளனர்.ஆகஸ்ட் 27ம் தேதி தனுஜ், அலிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய வந்தபோது, ​​கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றார். அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Annamalai
ஆக 30, 2024 19:21

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்


R S BALA
ஆக 30, 2024 18:57

இவரு ரவுடியா போலீஸா துறவியா?..


கல்யாணராமன் சு.
ஆக 30, 2024 17:00

இந்த மாதிரி தமிழிலே ரொம்ப நாளைக்கு முன்னாடி "கண்ணே பாப்பா " அப்படினு ஒரு சினிமா வந்தது ... பேபி ராணி , மேஜர் சுந்தரராஜன் நடிச்சது ... ஒருவேளை இந்த ஏட்டு அந்த படத்தை பாத்திருப்பாரோ ??


முருகன்
ஆக 30, 2024 16:03

உலகில் விலைமதிப்பற்ற ஒன்று பாசம் தான் அதனை சிலர் தவறாக பயன்படுத்துவது தான் பிரச்சினை


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 30, 2024 14:19

குழந்தையை நன்றாக பார்த்து கொண்டார். நன்றிகள்


KRISHNAN R
ஆக 30, 2024 14:08

எது எப்படியோ.....பொலிஸார்..... ஆடி பாடி...எல்லாம் வேலை பார்த்து...பிடித்துள்ளனர்... பாராட்டலாம்


SUBRAMANIAN P
ஆக 30, 2024 13:34

இது என்ன பிரமாதம், பேசப்போராட்டம்., கடத்தும்போது குழந்தைக்கு பதினோரு மாதம்தான் வயது. அப்போது அந்த குழந்தைக்கு என்ன விபரம் தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை