உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் துயரம்! கோவில் திருவிழாவில் மரப்பாலம் விழுந்தது; பக்தர்கள் 7 பேர் பலி; 80 பேர் படுகாயம்

உ.பி.,யில் துயரம்! கோவில் திருவிழாவில் மரப்பாலம் விழுந்தது; பக்தர்கள் 7 பேர் பலி; 80 பேர் படுகாயம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கோவில் திருவிழாவில் மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் ஆதிநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மிக திருவிழா ஒன்று நடந்தது. அப்போது கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த, மர மேடை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ls26eorn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதில் சிக்கியவர்கள் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் இல்லாததால், காயம் அடைந்தவர்களை இ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சமாளித்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
ஜன 29, 2025 06:58

ஆளுக்கு எவ்ளோ லட்சமாம்?


அப்பாவி
ஜன 28, 2025 19:10

போய் சாட்டையால் அடிச்சுக்கலாம்.


அப்பாஜி
ஜன 28, 2025 19:09

டபுள் இஞ்சின் சர்க்கார் ஹை. எல்லாரும் கும்ப்மேளாவில் பிசி ஹை.


Ray
ஜன 28, 2025 16:16

ஆம்புலன்ஸ் இல்லாததால், காயம் அடைந்தவர்களை இ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆகா இதுதானோ மோடியின் இன்பிராஸ்ட்ரக்ச்சர் டெவெலப்மெண்ட்டுங்கறது. ஒட்டு போடலைன்னா ஒத்த பைசா கிடையாதுங்கற வன்மத்தின் பலன் இது


Senguraja
ஜன 28, 2025 14:15

இங்கு நடத்திருந்தால் dmk வின் தோல்வி என சிலர் பேசியிருப்பார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 11:34

இது நடந்தது உ பி யில். எங்கே எனது Fan club?? இதுவா திராவிட மாடல்?? விடியல், உதய்ண்ணா, 200 ரூவா ஊபிஸ் என்று கர்ஜிக்கவும். முடியாது இல்லியா??? பாவம்.


KumaR
ஜன 28, 2025 13:14

ரொம்ப எரியுது போல. தமிழ்நாட்டுல உங்க திராவிட கூட்டம் ஆட்சி நடுத்தர லச்சனத்துக்கு அடுத்த ஆட்சியை பத்தி பேச வந்துட்டீங்க..


S Regurathi Pandian
ஜன 28, 2025 11:33

ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும். அதேநேரம் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் வேறு ஏதாவது குறை கூறி பித்தலாட்ட அரசியலில் ஒரு கும்பல் இறங்கியிருக்கும். ஆனால் இதற்கு என்ன சொல்வார்களோ தெரியவில்லை.


கோமாளி
ஜன 28, 2025 11:23

பணம் படைத்த சமூகமாயிற்றே


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 11:17

வருத்தங்கள்.


Velan Iyengaar
ஜன 28, 2025 10:54

ராமராஜ்யத்திலே தெய்வக்குத்தம் அடிக்கடி நடக்குது போல ..எதாவது பரிகாரம் செய்யுங்கோ


mmm.krr
ஜன 28, 2025 11:11

உங்க வீட்ல நடந்தாலும் இப்படி தான் நக்கலா பதிவு போடுவிய நீ


R S BALA
ஜன 28, 2025 13:08

இந்தாளு பெயரை இப்படி வச்சிக்கிட்டு ..


KumaR
ஜன 28, 2025 13:11

அத அங்க உள்ள மக்கள் பாத்துப்பாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை