உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

வரதட்சணை தர மறுத்த மருமகள்; எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்ட கொடூர மாமியார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை தர மறுத்த மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் தொற்று ஊசியை செலுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கோவைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஹரித்வாரை சேர்ந்த இளைஞருக்கும், கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார்கள் ரூ.15 லட்சம் ரொக்கமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4jd32mto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் ரூ.25 லட்சம் ரொக்கம் கேட்டு மணமகன் வீட்டார் அழுத்தம் கொடுத்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களில் வரதட்சணை கேட்டு மாமியார் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து பெண்ணின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளுக்கு, அவரது மாமியார் எச்.ஐ.வி., வைரஸ் ஊசியை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
பிப் 16, 2025 20:18

ஊசி போட்ட கொடூர மாமியாருக்கு,அதே ஊசியை இரண்டுமுறை ஏற்றவேண்டும்.


ஆசாமி
பிப் 16, 2025 18:46

எதுக்கு இப்படி் புளுகறீங்க


தமிழன்
பிப் 16, 2025 15:48

இதற்கு சரியான தண்டனை என்றால் அந்த கேடுகெட்ட ஈனப்பிறவியின் 2 கண் விழிகளிலும் அதே ஊசியை உள்ளே விட்டு 5 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்க வேண்டும் தூக்கு தண்டனையெல்லாம் ஒரு தண்டனையே கிடையாது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 16, 2025 15:28

உத்தரபிரதேச மாடல். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். தமிழ் நாட்டில் இது நடந்திருந்தால் விடியல்அரசு என்று எழுதுவார்கள். உ பி யின் தலைநகரம் என்பதால் யோகி மாடல் என்று எழுத வேண்டும். அந்த அளவுக்கு அறிவு கிடையாது. உ பி யில் பெண்களுக்கு பெண்களிடமிருந்தே பாதுகாப்பு இல்லை என்று எழுத வேண்டும்.


வாய்மையே வெல்லும்
பிப் 16, 2025 19:11

மஞ்சகாமாலை போன்று எழுதும் பிறவிக்குணம் உள்ள வெங்காய மாடல் ஆட்களின் கோணபுத்தி இப்படித்தான் வேலை செய்யும் . இன்னும் உங்களிடம் இதுமாதிரி கோணலான எழுத்துக்களை நிறைய எதிரிபார்க்கிறோம்


Haja Kuthubdeen
பிப் 16, 2025 14:39

அதே வைரஸை உடம்பில் ஏத்தனும்...


Kasimani Baskaran
பிப் 16, 2025 14:03

மாமியாருக்கும் அந்த ஊசியால் ஒரு குத்து குத்தலாம்..


Sambath
பிப் 16, 2025 13:06

மகனுக்கும் வந்திருக்கணுமே? பணத்திற்காக குடும்பத்தை அழிக்கும் அரக்கி


Bahurudeen Ali Ahamed
பிப் 16, 2025 13:01

எவ்வளவு கொடூரம், இது கொலைக்கு ஒப்பான செயல், அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படவேண்டும்


venugopal s
பிப் 16, 2025 12:36

மாடல் இது தானோ?


Raj
பிப் 16, 2025 12:30

கடப்பா கல் திருடன்


சமீபத்திய செய்தி