மேலும் செய்திகள்
பணமோசடி வழக்கில் அல் பலாஹ் பல்கலை நிறுவனர் கைது
53 minutes ago
புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அன்மோல் பிஷ்னோய் என்பவன், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளான்.கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதம் மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலை சம்பவத்திலும் ,2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவனை போலீசார் தேடிவந்தனர் .அவனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனையடுத்து அன்மோல் பிஷ்னோயை கைது செய்யும்படி ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அன்மோல் பிஷ்னோய் கைது செய்யப்பட்டான். அவனை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அவனை அமெரிக்க அதிகாரிகள் அங்கிருந்து நாடு கடத்தியுள்ளனர். அவன் நாளை( நவ.,19) இந்தியா வந்தடைவான் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்மோன் பிஷ்னோய் நாடு கடத்தப்படுவது குறித்த தகவலை , பாபா சித்திக்கின் மகனுக்கு அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
53 minutes ago