உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ்- பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ்- பிரதமர் மோடி சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக வந்தனர். துணை அதிபர் வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், வரிவிதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nada Rajan
ஏப் 21, 2025 21:37

நான் துணை அதிபர் வான்ஸ் பிள்ளையாக பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிக்கட்டில் இருக்கும் பிரதமர் மோடியை கைகுலுக்கி பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:30

இலான் மாஸ்க் குழந்தையா பிறக்க ஆசைப்பட்டிருக்கலாம் ..ரொம்ப தாராளமனசு அவருக்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 21:25

வான்சின் மகள் விறல் சூப்பும் பழக்கத்தை விடவில்லை போல ....


SUBBU,MADURAI
ஏப் 21, 2025 21:24

These visuals will give severe burns to Haters!


Ramesh Sargam
ஏப் 21, 2025 20:50

இந்திய பொருட்களுக்கான வரிவிதிப்பு குறைக்கப்படுமா? முடிவு ட்ரம்ப் கையில் உள்ளது. ட்ரம்ப்பை கன்வின்ஸ் செய்யவேண்டியது வான்ஸ் மற்றும் உஷா பொறுப்பு.


சமீபத்திய செய்தி