உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த பேச்சு வேண்டாம் ராகுல்! வார்த்தை ரொம்ப கவனம்! வார்னிங் தந்த மத்திய அமைச்சர்

இந்த பேச்சு வேண்டாம் ராகுல்! வார்த்தை ரொம்ப கவனம்! வார்னிங் தந்த மத்திய அமைச்சர்

புதுடில்லி; எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எச்சரித்துள்ளார்.

பயம் போய்விட்டது

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ராகுல், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலை ஏற்க போவதில்லை என்றார். தேர்தல் முடிவுக்கு பின்னர் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,மீதான பயம் மக்களிடம் இருந்து போய்விட்டது என்றும் பேசினார்.

கண்டனம்

ராகுல் இந்த பேச்சு ஊடகங்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடும் கருத்துகளை முன் வைத்துள்ளார்.

வார்த்தைகளில் கவனம்

அவர் கூறி உள்ளதாவது; ராகுல் தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறார். தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தமது பாரத் ஜோடோ யாத்திரை பற்றி பேசுகிறார், மறுபக்கம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை விமர்சிக்கிறார். இது மிகவும் அபத்தமாக இருக்கிறது. சீனாவுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். தமது வார்த்தைகளை ராகுல் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஜனநாயகம்

முன்னதாக ராகுலின் அமெரிக்க பேச்சுக்கு அசாம் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா கண்டனம் தெரிவித்து இருந்தார். சீனாவை எப்போதும் உயர்த்தி பேசுகிறார், ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ravi Kulasekaran
செப் 11, 2024 19:30

இவரை நாடு கடத்துங்கள்.தேச துரோகி, நாட்டுக்கு தேவை இல்லை


M S RAGHUNATHAN
செப் 11, 2024 11:14

Rahul proves everytime he speaks whatP M said.


Rathinam Karthikeyan
செப் 11, 2024 07:49

Gosts advises Angels.


Rathinam Karthikeyan
செப் 11, 2024 07:43

ராகுல் மீதுள்ள கவனத்தை திருப்பி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். தலைமைக்கு கட்டு படும் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும். பிரிஜ் பூஷன்


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 03:36

கொத்தடிமையே முதலில் செய்தியை படித்து அதற்கு சம்பந்தமான கருத்தை எழுது .


Rathinam Karthikeyan
செப் 11, 2024 07:38

முதலில் வார்த்தைகளை பஜக வினர் சரியாக பயன் படுத்த வேண்டும். மல்யுத்த வீரர்களை பற்றி யாரும் பேசக்கூடாது எனும் தலைமை உத்தரவுக்கு கட்டு படாமல் மீண்டும் அவர்களை சீண்டுகிறார் மத்திய அமைச்சர். ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் பஜகவினர்


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 03:40

புகார் நாடகம் ஆடியவர்கள் திருட்டு ஊழல் கான் காங்கிரஸ் சேர்ந்தபிறகும் கூட எப்படி முட்டாள்தனமாக சப்பை கட்டு காட்டுகிறாய் . அப்படியே பேசினாலும் நாட்டிற்கு எதிராக, வெளிநாட்டிற்கு சென்று கேவலமாக பேசவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாதா கொத்தடிமையே?


PerArivalan
செப் 11, 2024 06:42

ரூப்பிஷ ஸ்பீச்


Sivagiri
செப் 10, 2024 13:04

ரொம்ப லைட்டா - பட்டும் படாமலும் இரண்டு மூணு வார்த்தைகளில் , கண்டிப்பதை பார்த்தா - பிஜேபிக்கும் அதன் தலைவர்களுக்கும் , கட்சியின் மீதும் , ஆட்சியின் மீதும் , நாட்டின் மீதும் அக்கறை பற்றுதல் போயிடுச்சு போல . . . காங்கிரஸ் கம்பெனி முன்னாள் - பைஜாமா ஜிப்பா அம்பாசிடர் கார் - மேனேஜர்கள் போல , பத்து வருஷமா பதவி போதை ரொம்ப ஏறிடுச்சு போல . . . மோடி , உலகமெல்லாம் சுற்றி இந்தியாவுக்காக ஆதரவுகளை திரட்டி , நாட்டை உயர்த்துவதில் உழைத்து கொண்டிருக்கிறார் என்றால் , இவர்கள் , பதவி சுகத்தில் ஆழ்ந்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் போல . . . மீண்டும் ஒரு எமெர்ஜென்சியை கொண்டு வந்து எதிர் கட்சிகளை உள்ளே தள்ளி பயத்தை காட்டினால்தான் , உஷார் வரும் போல . . .


Ethiraj
செப் 10, 2024 10:52

Travel ,boarding and lodging expenses of Raul who is paying. Is it official trip or personal tourism. What is the emergency for such a short trip


saravan
செப் 10, 2024 10:32

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கூட்டணியில் இல்லாத வேறு கட்சிகள் இதுபோல் பேசியிருந்தால் குறிப்பாக பாஜக... ஆட்சி அதிகாரம் பேசியவர்களை கைது செய்திருக்கும் ... மத்தியில் பாஜக ஆட்சிசெய்கிறதா அல்லது பதவி சுகத்தில் இருக்கிறதா என்ற சந்தேகமே எழுகிறது ... இம்மை மறுமை பேசினால் கைது ஆனால் தாய் நாட்டை தரம் தாழ்த்தி பேசினால் ஒன்றும் இல்லை நல்லா இருக்குப்பா உங்க சட்டம்.


M Ramachandran
செப் 10, 2024 10:05

அரசியலுக்கென லாயக்கற்ற மேல் மாடி காலியாக இருக்கும் நபர் மனநலம் பாதிக்க பட்ட ஒருவர்போல் பேசுதால் மேலும் தவிர அவர் நடவடிக்கை. இதனையய குண நலமுள்ள ஒருவரை எதிர் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த நெல்லிக்காய் மூட்டை. கும்பல் என்னென்பது


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 03:42

அந்த நெல்லிக்காய் மூட்டை கும்பலுக்கு 40 MP அள்ளிக்கொடுத்தது தமிழக மேதாவிகள். வெட்கக்கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை