உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாயாவதி அமைச்சர் மீது கொலை வழக்கு

மாயாவதி அமைச்சர் மீது கொலை வழக்கு

லக்னோ : உத்திர பிரதேச மாநில கால்நடை மற்றும் பாலவளத்துறை அமைச்சர் ஆவாத்பால் சிங் யாதவ் மீது அம்மாநில போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தனியார்த்துறை பாதுகாப்பு அதிகாரியான சந்தோஷ் ஜூன் 10ம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி சந்தோஷ் புத்திசாகர் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உடன் பணிபுரியும் விஜய் வர்மா மற்றும் அவரது மகன் மிதுன் வர்மா ஆகியோரால் சந்தோஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஆவாத்பால் இருப்பதாக சந்தோஷின் சகோதர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று மேலும் 2 கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக அமைச்சர் ஆவாத்பால், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா மசோதாவில் ஊழல் புரிந்தவர்கள் பட்டியலிலும் அமைச்சர் ஆவாத்பால் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி