உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்றுநோய் குணமாக கங்கையில் மூழ்கடித்த உறவினர்: மூச்சுத்திணறி சிறுவன் பலி

புற்றுநோய் குணமாக கங்கையில் மூழ்கடித்த உறவினர்: மூச்சுத்திணறி சிறுவன் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: மூட நம்பிக்கை மற்றும் அதிசயம் நடக்கும் என்ற நப்பாசையில் பெற்றோரின் செயல் காரணமாக 5 வயது சிறுவன் உயிர் பறி போன கொடூரம் உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.டில்லியில் பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுவன், ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளான். மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். ஆனால், சிறுவன் வாழ்வது கடினம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் என பெற்றோர் நம்பி உள்ளனர். இதனையடுத்து பெற்றோர், சிறுவன் மற்றும் உறவுப்பெண் ஒருவர் என 3 பேர் நேற்று, கார் மூலம் டேராடூன் சென்றுள்ளனர். காரில் பயணிக்கும் போதே சிறுவன் மிரட்சியுடன் காணப்பட்டதாக டிரைவர் கூறினார். விசாரித்ததில், ரத்த புற்றுநோய் காரணமாக அப்படி காணப்படுவதாக பெற்றோர் கூறியதாக விளக்கமளித்தார்.டேராடூன் வந்ததும், கங்கை நதியில் சிறுவனை உறவுப்பெண் மூழ்க வைத்துள்ளார். பெற்றோர் கரையில் நின்று பிரார்த்தனை செய்தனர். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்துள்ளனர். சிறுவன் நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவே இதனை நிறுத்தும்படி சிலர் சைகை மூலம் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோரும், உறவுப்பெண்ணும் அதனை கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்தவர்கள், வலுக்கட்டாயமாக அவர்களை தடுத்து சிறுவனை தூக்கினர். ஆனால் அவர்களை உறவுப்பெண் தாக்கி உள்ளார்.இருப்பினும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,அந்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இருப்பினும், அச்சிறுவன் உடல் அருகே அமர்ந்திருந்த உறவுப்பெண், சிறுவன் கண்டிப்பாக உயிர் பிழைத்துவிடுவான் என நீண்ட நேரம் கூறிக் கொண்டு இருந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Viswam
ஜன 26, 2024 11:51

கொடூரம்


g.s,rajan
ஜன 26, 2024 07:57

மூட நம்பிக்கைகள் பொதுவாக உலக அளவில் நமது நாட்டில் மக்களிடம் அதிகரித்து வருகிறது என்பது மிகவும் வேதனை.....


Ramesh Sargam
ஜன 26, 2024 00:48

குழந்தைக்கு புற்றுநோய் இல்லை. அந்த குழந்தையை மூழ்கடித்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பிடித்துள்ளது ஒருவித மனநோய். முதலில் அவர்களை அந்த கங்கை நதியில் மூழ்கடிக்கவும்.


Kathiresan
ஜன 26, 2024 00:10

"மூட நம்பிக்கை மற்றும் அதிசயம் நடக்கும் என்ற நப்பாசையில் ..." அதை நீங்கள் சொல்கிறீர்கள். வேடிக்கை தான்.


Karthik M
ஜன 25, 2024 22:00

அந்த குழந்தை உயிர் பிறக்காத சாத்தியம் இல்லை என்றாலும், இப்படி தண்ணீரில் மூழ்கடித்து கொள்வது எவ்ளோ பெரிய சித்திரவதை .... அந்த பிஞ்சு குழந்தை எப்படி துடி துடித்து இருக்கும் ..தண்ணீரில் இருத்து மேலே வர எப்படி போராடி இருக்கும் ..ஒரு தாய் தந்தையை விட வேறு யார் ஒருவர் மேலேயேயும் ஒரு குழந்தை பாதுகாப்பாக இருக்க நினைக்காது ...ஆனால் இந்த குழந்தைக்கு அவர்களே அரக்கர்கள் என்று இந்த குழந்தைக்கு தெரிய வரும் போது எப்படி துடி துடித்து இறந்திருக்கும் .....கடவுளே ...அந்த பிஞ்சு வலி இல்லாமல் நீங்கள் ஆத்மாவை எடுத்திருப்பீராக ...


தமிழ்
ஜன 25, 2024 18:14

செய்தியைப் படிக்கும்போதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.


Pandi Muni
ஜன 25, 2024 17:56

இது கருணை கொலை. ஏமாற்று பேர்வழிகள்.


DVRR
ஜன 25, 2024 17:33

இந்த சொல் தவறு தான்.... லட்சம் செலவு செய்து கோடியில் முடியும். 2)சரி இதனால் பூரண தீர்வு கிடைக்குமா, கிடைக்கவே கிடைக்காது.. ... பல வருடம் ஒன்று மாற்றி ஒன்று என்று கஷ்டம் அனுபவிக்கவேண்டும்.3) சரி படித்து நல்லவேலையில் நல்ல பணம் சம்பாத்தித்து, இது எதுவும் சாத்தியமில்லை. ஆகவே அந்த குழந்தை இறைவன் அடி சேர்ந்ததே சரி தான். அடுத்த ஜென்மத்திலாவது நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்கட்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 25, 2024 16:09

மருத்துவர்கள் இனி குழந்தை பிழைக்க மாட்டான் என்று கை விட்டு விட்டார்கள். பெற்றோர் வேறு வழியின்றி, சிறுவன் படும் கஷ்டத்தை சகிக்க முடியாமல், விரக்தியில், வேதனையில், கண்மூடித்தனமாக, இறுதி முயற்சி செய்துள்ளனர். இன்றில்லாவிட்டாலும் இன்னும் ஒருசில நாட்களில் அந்த சிறுவன் இறந்திருப்பான். ஆற்றில் மூன்றுமுறை தலை மூழ்கி எழுந்திருப்பது என்பது வேறு, நீருக்கடியில் மூச்சு விட வழியில்லாமல் நோயுற்ற சிறுவனை தொடர்ந்து சில நிமிடங்கள் வலுக்கட்டாயமாக அமிழ்த்தி பிடித்திருப்பது என்பது வேறு. இது கருணைக்கொலை குற்றத்திற்கு சமம். அருகில் இருந்த ஒருவர் தடுத்து குழந்தையை வெளியே எடுத்து காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனாலும் கால தாமதம் ஆனதால் குழந்தை இறந்துவிட்டது. இந்த வீடியோவை நான் பார்த்தேன்.


முருகன்
ஜன 25, 2024 15:59

இதற்கு காரணம் அளவுக்கு மிறிய பக்தி என்ற மூட நம்பிக்கை தான் காரணம் தற்போது கடவுள் தான் மேல் என்ற மாயையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திய தான் விளைவு இது


Sivakumar
ஜன 25, 2024 19:45

அப்படிப்பட்ட மாயையை ஏற்படுத்தாத கட்சியை ஹிந்து விரோத கட்சி-னு இங்குள்ள பலரும் ஒதுக்கி எள்ளி நகையாடுகி கிறார்களே, என்ன செய்வது


sridhar
ஜன 26, 2024 10:15

கிறிஸ்துவ மிஷ நரி கூட்டம் பேச்சு எதையும் நீங்க கேட்டதில்லையே .


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி