உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு ?

கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு ?

கோல்கட்டா: நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய கோல்கட்டா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆக். 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.இச்சம்வத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்களின் தொடர் போராட்டங்களால் மேற்கு வங்கத்தில் பல அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

162 நாட்களில் தீர்ப்பு

இந்தவழக்கு கோல்கட்டாவில் செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 2:30 மணியளவில் நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பை வெளியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Oru Indiyan
ஜன 18, 2025 11:58

அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த வன்முறைக்கு தீர்ப்பே வராது.


sankaranarayanan
ஜன 18, 2025 11:19

இவ்வளவுநாட்களாக இன்னுமா தீர்ப்பு வெளி வரவில்லை ஆட்சி அங்கே நீடிக்குமா நீதிமன்றமே குறுக்கிவிட்டு தவறு அரசாங்கத்தைமீது இருக்கிறது என்றே கூறிவிட்டாள் பிறகு மமதையின் ஆட்சி கவிழ்த்து அல்லது கலைக்கப்படும் நிலை வந்துவிடும்.


Va.sri.nrusimaan Srinivasan
ஜன 18, 2025 09:15

நல்ல தீர்ப்பாக வழங்குங்கள் ! Srinivasan


Svs Yaadum oore
ஜன 18, 2025 08:54

என்ன தீர்ப்பு ??....இந்த வழக்கே சரியாக விசாரிக்கப்படவில்லை ....இங்குள்ள 200 ரூபாய் பிரியாணி திராவிட கொத்தடிமை போல எவனோ ஒரு அடிமையை பலி கொடுத்து இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள் ...முக்கியமான சாட்சியங்கள் தடயம் என்று அனைத்தும் அழிக்கப்பட்டது .....மருந்து கொள்முதல் முதல் மருத்துவத்துறை மற்றும் கல்லுரி முழுக்க லஞ்ச ஊழல் ..இந்த கல்லுரி முதல்வர் இப்போது ஜாமினில் வெளியே ....ஆட்சியில் மேற்கு வங்க மேடம் உள்ளவரை பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது ....


RK
ஜன 18, 2025 07:38

உங்கள் தீர்ப்பை பொறுத்துதான் அடுத்த குற்றவாளி உருவாகுவான ? அல்லது குற்றம் செய்ய தயங்குவானா ? கேள்விக்குறிதான் !!!


Raj
ஜன 18, 2025 07:26

ஒரே தீர்ப்பு தூக்கு தண்டனை தான். இல்லை என்றால் இனி இது போல சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.


Senthoora
ஜன 18, 2025 07:22

என்னதான் தீர்ப்பு தண்டனை கொடுத்தாலும், திருத்த முடியாத ஜென்மங்கள் திருந்தவாபோகுது. பத்து நாளுக்கு தொடர்ந்து கசை அடி கொடுத்து அதை செய்தியில் தொலைக்காட்ச்சியில் காட்டணும். அதுக்குப்பின் தூக்கில் போடணும். அவன் மட்டும் எதுக்கு சுருக் என்று சிலநொடியில் சாகனும்.


Duruvesan
ஜன 18, 2025 07:15

அதான் சொர்ணாக்கா தூக்குன்னு சொல்லிச்சி இல்ல, விடுங்கப்பா. எப்படி ராஜிவி கொலையாளிகள் விடுதலை கு சட்டம் போட்டு, ஜனாதிபதி நிராகரிப்பு செய்தாலும் கோர்ட் மூலம் விடியல் பணிய வெச்சாரோ அதே பாணில அவனுக்கு தூக்குன்னு சட்டம் போடலாம், இல்ல யோகி ஆளுங்க மாதிரி கோர்ட் கு வரும் போது ஆளு செட் பண்ணி சுட்டு கொள்ளலாம், இல்லைனா ஜேஜே செய்த மாதிரி கரண்ட் ஷாக் ல கொள்ளலாம்,


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:11

மேல் முறையீடு, கீழ் முறையீடு என்று வரும். ஆனாலும் இந்த வழக்கு விரைவாகவே நடத்தியிருக்கிறார்கள். அரசியல் வாதிகள் மீதான வழக்கையும் இந்த வேகத்தில் முடித்தால் ஓராண்டுக்குள் வழக்குகள் முடிக்க முடியும்.


Barakat Ali
ஜன 18, 2025 07:11

இவன் மட்டும் பலிகடா ...... இதுக்கு சி பி ஐ .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை