உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகவும் ஆபத்தானது!

மிகவும் ஆபத்தானது!

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்கும்படி, கொல்கட்டா அணி நிர்வாகத்தை பி.சி.சி.ஐ., வலியுறுத்தி உள்ளது. விளையாட்டில் ஜாதி, மதம், மொழி பார்க்கக் கூடாது. விளையாட்டை அறிவற்ற முறையில் அரசியல்மயமாக்குவது மிகவும் ஆபத்தானது. சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்.,

இணைய வேண்டும்!

மஹாராஷ்டிராவில் நடக்கும் மாநகராட்சி தேர்தலில், ஒருசில மாநகராட்சிகளில், துணை முதல்வர் அஜித் பவாரு ம், சரத் பவாரும் கூட்டணி வைத்துள்ளனர். இருவரும் பா.ஜ., மீது ஊழல் குற்றச்சா ட் டை சுமத்தி உள்ளனர். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, சரத் ப வாருடன் அஜித் பவார் மீண்டு ம் இணைய வேண்டும். சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., - உத்தவ் சிவசேனா

மந்திரவாதி!

வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில், பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஜனநாயகத்தை தேர்தல் கமிஷன் சீர்குலைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஒரு மந்திரவாதி. அவரால், உயிருள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறைய செய்யவும், இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரவும் முடியும். அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஜன 06, 2026 16:28

திரு அபிஷேக் பானர்ஜி அவர்களே நீங்கள் மிகச் சரியாக சொன்னீர்கள் கட்சிகளால் நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் காகிதத்தில் மட்டும் உயிரோடு வரவேற்கிறார்கள் ஆனால் அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளோ இறந்தவர்களை ஓட்டு போடவும் செய்கிறார்கள் எனவே தலைவர்கள் தலைவர்கள் தான் அதிகாரிகள் அதிகாரிகள் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை