உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நட்டாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரம் அளித்துள்ளது.மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து. துணை ஜனாதிபதி பதவி காலியாக உள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.தற்போது துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uqx80kxd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை தொடர்ந்து இன்று பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ), பார்லி வளாகத்தில் முக்கிய பாஜ தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேடி(யூ)வின் லாலன் சிங், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு மற்றும் எல்.ஜே.பி (ராம் விலாஸ்) இன் சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில்,ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரம் அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.மோடி மற்றும் நட்டா துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். துணை ஜனாதிபதிக்கான ஓட்டெடுப்புக்கு ஒரு நாள் முன்பு, செப்டம்பர் 8 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மற்றொரு பெரிய கூட்டத்தை நடத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Narayanan Muthu
ஆக 07, 2025 20:10

பிஜேபியினர் எல்லாமே நாக்பூர் காரருக்கு அடிமைகளே. இவர்கள் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. நாக்பூர் சமஸ்தானத்தில் இருந்து கை காட்டுபவருக்கு பதவிகளும் பொறுப்புகளும்.


Suppan
ஆக 07, 2025 22:35

இதிலென்ன தவறு . பாஜகவில் பலர் நாகபூர் வழி வந்தவர்களே . உங்களை மாதிரி கொத்தடிமைகள் இல்லையே


vivek
ஆக 07, 2025 23:00

அறிவாலய அடைப்பு எல்லாம் கருத்து சொல்ல கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை