உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: ஹரியானா தேர்தலில் களமிறங்க தயார்

காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: ஹரியானா தேர்தலில் களமிறங்க தயார்

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று (செப்.,6) காங்கிரசில் இணைந்தனர். ஹரியானா சட்டசபை தேர்தலில் இருவரும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w6iugu4i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் போட்டியில் பைனல் வரை சென்றார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது இந்தியர்களை அதிர்ச்சியடைய செய்தது. இருந்தும், அவர் நாடு திரும்பியபோது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவருக்கு சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்களும் ஆதரவளித்தனர். இதற்கிடையே காங்கிரசின் அழைப்பின்பேரில், சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.இந்த நிலையில், வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்தார். அத்துடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் காங்கிரஸ் வேட்பாளராக அவர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankar
செப் 06, 2024 19:20

தற்குறிகள் - தற்கொலை செய்ய முடிவெடுத்தால் தடுக்கவேண்டாம்


Ramesh Sargam
செப் 06, 2024 18:29

நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டாய். இனி சேராத சேர்க்கையால் வாழ்க்கையையும் தவறவிடப்போகிறாய். இதுதான் உன் விதி என்றால்.... அதை யாராலும் மாற்றமுடியாது.


கனோஜ் ஆங்ரே
செப் 06, 2024 19:52

அப்ப... உங்க பாஜக..வுல சேர்ந்தா புனிதர் பட்டம் கொடுத்துடுவீங்க... அப்படித்தானே...?


sankaranarayanan
செப் 06, 2024 18:18

சபாஷ் இனி காங்கிரசில் மல்யுத்தம் நடக்கும் பார்க்கலாம் விரைவில்


Sankar Ramu
செப் 06, 2024 16:30

தேச துரோகிகளிடம் அடமானம்.


Indian
செப் 06, 2024 17:44

நீயும் ஒரு துரோகி தான் , என்ன செய்ய ??


Kumar Kumzi
செப் 06, 2024 18:15

பார்ர்ரா இந்தியன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் ரோஹிங்கிய கள்ளக்குடியேறி கருத்து எழுதுறா ஹாஹாஹா


Indian
செப் 06, 2024 19:01

வந்தேறி ,நீ கருத்து எழுதும் போது நான் எழுத கூடாதா ?


veeramani hariharan
செப் 06, 2024 16:28

டூல்கிட் பூனைக்குட்டிகள் வெளியே வந்தது. "விளையாட்டை விளையாட்டாக விளையாடாமல் நாட்டுக்கு எதிராகவும் பாரதப் பிரதமருக்கு எதிராகவும் ஒரு எதிர்க்கட்சி போல் அடாவடியாக செயல்பட்டு நாட்டுக்கு அவப்பெயரை பெற்றுத்தர முயற்சித்த கூட்டு களவாணிகளை இன்று ராகுல் சந்தித்திருப்பது பூனைக்குட்டி வெளியே வந்தது... அந்த மல்யுத்த வீரர்கள் போராட்ட நாடகங்கள் எல்லாமே ராகுல் கூட்டம் ஏற்பாடு செய்த டூல்கிட் போராட்டம் தான் என்று இப்ப நாட்டு மக்களுக்கு புரிந்திருக்கும்.. ஜெய்ஹிந்த் ?


nagendhiran
செப் 06, 2024 16:04

தங்கை மங்கைனு சொன்வர்கள் எங்க?


Ramona
செப் 06, 2024 16:01

பத்தோடு இந்த பதினொன்றும் பன்னிரெண்டும். கேட்டுக்கு வெளியே தான்..


nagendhiran
செப் 06, 2024 15:56

காங்கிரசில் சேர்ந்து புனிதர் ஆகினர்?


Sathish kumar Selvaraj
செப் 06, 2024 16:23

Yeah same, how Ajit Pawar became clean by joining Maharashtra Govt.


nagendhiran
செப் 06, 2024 19:16

சதீஷ் மகாராஸ்டராவில் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து பதவி மோகத்தில் கூட்டணி மாறி அட்சியை கைப்ற்றிய சிவசேனாவுக்கு பாடம் புகட்டதான் பவார் மருமகனை தூக்கி ஆட்சி அமைக்கப்பட்டது?


nagendhiran
செப் 06, 2024 15:55

அதானே சோழியும் குமிடியும் சும்மா ஆடுமா என்ன?


முக்கிய வீடியோ