உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்., நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்., நோட்டீஸ்

புதுடில்லி; பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூரின் பேச்சை பாராட்டி, கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம்(ஜூலை 29) பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். 'நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மத்திய அரசு வகுக்கும் எந்த சக்கர வியூகத்தையும் நாங்கள் உடைத்தெறிவோம், என்று அவர் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், ''தன் ஜாதி பெயரே தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா என பதிலடி கொடுத்தார். ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு அடங்கிய வீடியோவை 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, இளம் மற்றும் மிகுந்த ஆற்றல் உள்ள அனுராக் தாக்குர் லோக்சபாவில் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும். உண்மைகளை, நகைச்சுவையுடன் கலந்து அவர் பேசியது, இண்டியா கூட்டணியின் பொய் அரசியல் பிரசாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எனக்கூறினார்.இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.,யும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். லோக்சபா செயலாளரிடம் அளித்த அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: அனுராக் தாக்கூர் பேசியதில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்கு உரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஆனால், எதையும் நீக்காமல், அனுராக் தாக்கூரின் முழு வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளையும் மோடி வெளியிட்டார். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ganapathy
ஆக 01, 2024 01:20

தனக்குத்தானே தன்னோட வாய் கொடுப்பது பப்பூ ஆப்பு வச்சிகினு இப்ப குத்துன்னுன்னா....ஆப்பு தன்னோட வேலய செய்யும்ல


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 22:00

கேடி என நாகரீகமற்ற முறையில் விமர்சித்தவர்கள் மீது இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. அவரைவிட கீழ்த்தரமான எம்பி உண்டா?


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 31, 2024 21:42

இந்த எதிர்க்கட்சி எதையாவுது ஆக்கபூர்வமா செய்யுதா?


Anu Sekhar
ஜூலை 31, 2024 20:36

இந்த பப்புக்கு,மக்களுக்கு நல்லதா ஒண்ணும் செய்ய தெரியாது. ஒரு நல்ல செயல் இன்னொரு நல்ல செயலை தரும்.


Narayanan Muthu
ஜூலை 31, 2024 20:15

மட்டமான அரசியல் வாதியை போல் பேசும் இந்த அனுராக்கை மக்களவைக்கு அனுப்பிய மக்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.தகுதியில்லாத ஒருவருக்கு பதவி கிடைத்தால் இப்படித்தான் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 21:58

ஸ்டாலின் கூடத்தான் தன்னை காணவந்த முதியவரிடம் அவரது சாதியைக் கூறி கவுடா அதுதானே எனக் கேட்டாரே. (இணையத்தில் வீடியோ இன்னும் உள்ளது).திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பை ஏமாற்றிப் பிழைக்கும் வழியாக மட்டுமே பயன்படுத்துகின்றன.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 31, 2024 22:25

நாராயணன் முது சில நாட்களாக உன்னோட கீழ்த்தரமான பதிவுகளை பார்க்காமல் சந்தோசமாக இருந்தோம். மறுபடியும் ஆரம்பித்து வீட்டை..


V Venkatachalam, Chennai-87
ஜூலை 31, 2024 22:30

நாராயணா, என்ன பப்புவ இப்படி பப்ளிக் ல போட்டு உடைச்சுட்டியே.. இதுவரை பப்புவ ரொம்ப புடவையால் மூடி மூடி பாதுகாத்தியே. போச்சு.. அவ்வளவும் போச்சு..


R Kay
ஆக 01, 2024 00:15

பார்றா உபி என்னமா பொங்குது


Sathyanarayanan Sathyasekaren
ஆக 01, 2024 05:54

நாராயணன் முத்து அனுராக் உங்கள் திருட்டு தலைவர்களை போல ஊழல் குற்றத்தில் கோர்ட் ஜாமினில் வெளியில் இருப்பவர் அல்ல. நமது ராணுவத்தில் கேப்டன் ஆக சேவை செய்தவர். கொத்தடிமை உங்களுக்கு அதுஎல்லாம் எப்படி தெரியும், திருடர்களை, 4 பெண்களை வைத்து இருந்தவனை தலைவன் என்று கொண்டாடும் உங்களது கூட்டத்திற்கு நல்லவர்களை பார்த்தாலும் அப்படிதான் தெரியும். சொந்த பெயர் கூட பொய்யாக இருக்கும் ராகுலை தேர்ந்தெடுத்த மாக்கள் தான் வெட்கப்படவேண்டும்.


பேசும் தமிழன்
ஜூலை 31, 2024 19:22

பப்பு மற்றும் புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... பதில் கொடுத்தால்.... கேன்டீன் நோக்கி ஓடி விடுவார்கள்.... அந்தளவுக்கு தைரியமான ஆட்கள் ???


Svs Yaadum oore
ஜூலை 31, 2024 19:04

அரசு எடுக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு என்றால் கணக்கு எடுப்பவர் வீட்டுக்கு வந்து என்ன சாதி என்று கேட்பார் ...அதற்கு பதில் சொன்னால் குறிப்பெடுத்து செல்வார் ....சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்பவனிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டால் உடனே அப்படியே தேஞ்சு போகுமா ??....அப்ப எதுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று கோரிக்கை வைக்கனும்?? ..


chandrasekara rao
ஜூலை 31, 2024 18:58

மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலம் பதில் சொல்லும்.....


Barakat Ali
ஜூலை 31, 2024 18:22

வெறுப்பு என்னும் விஷத்தை காங்கிரஸ் தொடர்ந்து கக்குகிறது ......


Anand
ஜூலை 31, 2024 18:08

காங்கிரஸிற்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது, இத்தாலி தீயசக்தி அளவுக்கு மீறி ஆட்டம் போடுகிறார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை