உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் வன்முறை:2 பேர் பலி- பதற்றம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை:2 பேர் பலி- பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் இன்று (30.01.2024) இரு கிராமத்தில் வசிக்கும் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர் .பலர் காயமடைந்தனர். மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இரு பிரிவினரிடையே மோதல் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (30.01.2024) மணிப்பூரின் மேற்கு மாவட்டங்களான கவுட்ரக் கிராமத்தைச்சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கும், கங்கோகிப் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பா.ஜ.,இளைஞர் உள்பட இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இரவை தாண்டியும் வன்முறை நீடிப்பதால் இரு கிராமங்களிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜன 31, 2024 17:05

ஜனாதிபதி உரையில் இதையெல்லாம் பேசாதது வருத்தமக் அளிக்கிறது.


அப்புசாமி
ஜன 31, 2024 06:51

பார்லிமெண்ட்டில் பேசாதீங்க.


23 ம் புலிகேசி
ஜன 31, 2024 04:11

அதெப்படி சரியா பார்லிமென்ட் கூடும்போது கலவரம் வெடிக்குது.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 02:07

வன்முறையை தூண்டிவிட தான் ராகுல் மணிப்பூர் சென்றார். இந்த செய்தியை படித்ததும், சென்ற வேலை நிறைவடைந்ததாக பூரிப்படைவார்.


Ramesh Sargam
ஜன 31, 2024 00:52

ராகுல் அந்த பக்கம் போகும்போதே இதை எதிர்பார்த்தேன்.


மேலும் செய்திகள்