உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: 4 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: 4 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தி்ல் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றால், மணிப்பூர் முழுதும் கலவரம் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கலவரம் ஒய்ந்த நிலையில் நேற்று துபால் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு தரப்பு மோதல் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை பக்கத்து மாவட்டமான பிஷ்னாப்பூர், கிழக்கு இம்பால் ஆகிய பகுதிகளும் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜன 02, 2024 10:50

உலகம் முழுவதும் பழங்குடி- மலைச்சாதிகளுக்குள் பழைய பகையால் மோதல் எங்குதான் நடக்கவில்லை????? அன்னிய மிஷனரிகள் மற்ற வடகிழக்கு மாநிலங்களில் செய்த அளவுக்கு மணிப்பூரில் மதமாற்றம் செய்ய முடியாத வருத்தத்தில் எதிர்கட்சிகளைத் தூண்டி விடுகின்றன.


அப்புசாமி
ஜன 02, 2024 10:38

மணிப்பூர் பக்கமே போக மாட்டேன், உங்களில் ஒருவன்.


Rpalnivelu
ஜன 02, 2024 06:45

முதல் குற்றவாளி மணிப்பூரை பற்றி எரிய வைக்கும் தீர்ப்பை கொடுத்த நீதிபதி. ரெண்டாவது சீனாவின் நரித் தந்திரம். அவதிப்படுவது மக்கள் சிக்கி திணறும் அரசு


Ramesh Sargam
ஜன 02, 2024 00:55

புதிய வருடத்தில் மோடியின் பெயரை கெடுக்க எதிர்க்கட்சியினர் செய்த காரியம் இது.


Velan Iyengaar
ஜன 01, 2024 22:55

நம்ம ஆளு... அம்பதி ஆறு இன்ச் மார்புக்கு சொந்தகாரர்...வாய் திறப்பாரா?? இல்லை மௌனியாக வேடிக்கை பார்பரா?/ பெண்களை நிர்வாணப= படுத்தி நடக்கவிட்டபோதே வாய் திறக்காத ஆசாமி இப்போ வாய் திறப்பார் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை