உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது தோன்றிய மர்ம மிருகம்: ஜனாதிபதி மாளிகையில் சஸ்பென்ஸ்

மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது தோன்றிய மர்ம மிருகம்: ஜனாதிபதி மாளிகையில் சஸ்பென்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t6bpdraj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (ஜூன் 9) இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். அத்துடன் மோடியை தவிர்த்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது. இந்நிலையில் பதவியேற்பு விழாவின்போது பா.ஜ., எம்.பி., துர்கா தாஸ் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டபோது மாளிகையின் பின்னால் உட்புறம் சிறுத்தை போன்ற மர்மமான விலங்கு சர்வசாதாரணமாக நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த மர்ம விலங்கு, சிறுத்தையா அல்லது பெரிய சைஸ் பூனையா, அல்லது வேறு ஏதேனும் விலங்கா எனத் தெரியவில்லை. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தபோது இந்த மர்ம விலங்கு எப்படி வந்தது என கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Srinivasan Krishnamoorthi
ஜூன் 13, 2024 15:42

1982ம் வருஷம் தெற்கு பிளாக்கில் பணிக்கு சென்ற நேரம் பார்த்த நினைவுள்ளது


kantharvan
ஜூன் 13, 2024 11:17

ஏய் என்ன வச்சு காமெடி ஏதும் பண்ணலியே??


Sampath Kumar
ஜூன் 11, 2024 11:14

கடவுளின் வாகனமாக இருக்கும் பின்ன அதை விட்டு விட்டு அய்யாஜி பதவி ஏற்றல் அது சும்மா இருக்குமா ?


K V RAVISHANKER
ஜூன் 11, 2024 09:49

May be, he want to see the good political actors from the top position????


venugopal s
ஜூன் 10, 2024 22:37

கடவுளைப் பார்க்க வந்திருக்கும் போல்!


K V RAVISHANKER
ஜூன் 11, 2024 09:53

அப்படி யாரும் அங்கு இல்லையே கடவுள் மாறி ? கடவுள் பெயரை நாம் ஏன் கெடுக்கணும் . All good political actors are sitting there, so he want to see their actings ??


naadodi
ஜூன் 10, 2024 19:25

At least the cat is out of the bag. It is a familiar English idiom to express the secret is out.


KRISHNAN R
ஜூன் 10, 2024 19:23

இந்த வீடியோ சரியானதா என்பதை அறிய வேண்டும். எப்படி இருந்தாலும்..... ஒரு வேளை தனக்கு போரடித்து விட்டது என்று மத்திய.வங்கியின் சின்னம் எழுந்து வந்து.. இருக்குமோ.....??


முரா
ஜூன் 10, 2024 19:16

நல்ல வேளை பதவி ஏற்கவில்லை


Krishna Kumar
ஜூன் 10, 2024 18:26

ராகுல்..காந்தி..மாறு..வேடத்தில்..வந்திருபரோ


Krishna Kumar
ஜூன் 10, 2024 18:24

ராகுல்..காந்தி..மாறு..வேடத்தில்..வந்திருப்பாரோ


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை