உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர்பட்டியல் விவகாரம்: இன்று பெங்களூருவில் ராகுல் ஆர்ப்பாட்டம்

வாக்காளர்பட்டியல் விவகாரம்: இன்று பெங்களூருவில் ராகுல் ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.''பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் கமிஷன் ஓட்டு களை திருடுகிறது. இதற்கு உதாரணமாக மஹாராஷ்டிராவில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம். வெற்றி வாய்ப்பு தேர்தல் முடிவுகள் திட்டமிடப்படுகின்றன. இதற்கு, லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதி முடிவுகளே சாட்சி. இது, அரசியல் அமைப்புக்கு எதிரான குற்றம். இதில் நீதித் துறை தலையிட வேண்டும்,'' என, நேற்று சில புள்ளி விபர ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி உள்ளார்.இந்நிலையில் இன்று கர்நாடகத்தில் பெங்களூருவில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்.எம்.பி., ராகுல் தலைமை தாங்குகிறார். அவருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பின்னர் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து புகார் மனு கொடுக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

babu
ஆக 08, 2025 12:59

முற்றிலும் உண்மை தான். எதிர்க்கட்சிகள் அனைத்தும் கட்சி பேதங்களை மறந்து பொதுமக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் இமாலய போராட்டத்தை தேர்தல் ஆணையம் மற்றும் சங்கிகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்


Chess Player
ஆக 08, 2025 11:23

இது பொய் மட்டும் சொல்லும் பிறவி. விதுரர் மஹாபாரதத்தில் கூறுகிறார் - நீ புண்யம் செய்தாயா இல்லை பாவம் செய்தாயா என்று தெரிய உன் பிள்ளைகளை பார்.


Anvar
ஆக 08, 2025 10:13

அப்போ, இல் நாடு, கேரளா கர்நாடக தெலுங்கானா காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பிஜேபி குளறுபடிகளால் வந்ததா


Rajasekar Jayaraman
ஆக 08, 2025 09:08

இவருக்கு இருக்கவே இருக்கிறது சுப்ரீம் கோர்ட் அங்கே விரும்பிய நீதி கிடைக்கும்.


RAAJ68
ஆக 08, 2025 08:46

ஒரு பழமொழி உண்டு. மணலை பிழிந்து கூட எண்ணையை எடுக்கலாம். ஆனால் பிடிவாத குணம் உடைய முட்டாளுக்கு புரிய வைப்பது கடினம்.


Narayanan Muthu
ஆக 08, 2025 08:01

தேர்தல் ஆணையம் கையும் களவுமாக பிடிபட்டதில் சங்கிகளுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளது. மழுப்பலான கருத்துக்களும் மொக்கையான பதில்களுமாக வாந்தி எடுக்கிறார்கள். ராகுல் கொடுத்த தகவல் தவறென்றால் தேர்தல் ஆணையம் உண்மையான டிஜிட்டல் தரவுகளை கொடுத்து பதிலடி கொடுக்கட்டும். திருடர்கள் எப்பதும் தான் திருடன் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உரிய விசாரணைகளுக்கு பின்பே திருட்டு நிரூபணம் ஆகும். ஜனநாயகம் காக்கப்படவேண்டுமானால் உச்சநீதிமன்றத்தின் தலையீடு அவசியம்.


Mohan
ஆக 08, 2025 09:41

டேய் தேர்தல் ஆணையம் தான் ஆதாரம் இருந்த குடுன்னு சொல்ராங்களே அப்பறோம் ன்ன குடுத்துட்டு போக வேண்டியது தான ...இருக்கவே இருக்கு உச்ச நீதிமன்றம் கேஸ் போடு அங்க பூரா நம்ம வக்கீல் தான் ..அப்பறோம் என்ன பயம் ..ஏன் அல்லக்கை


Mohan
ஆக 08, 2025 09:45

என்ன ஜென்மமோ ... ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ பாவம் செய்தா மட்டும் சேராது ..அதுக்கு முட்டுகுடுக்குற பாரு அதுவும் பெரிய பாவம் தான் ..அது உனக்கு சீக்கிரமே புரியவரும் ...அன்னிக்கி கண்ணீர் வடிப்பே அப்போ தெரியும் அதனோட வலி


vivek
ஆக 08, 2025 10:17

அப்போ பிரமாண பத்திரத்தில் கை எழுது போட சொல்லு நாராயணன் முத்து


Swaminathan L
ஆக 08, 2025 07:49

நேற்று பொதுவெளியில் ராகுல் வெளியிட்ட தரவுகள் அனைத்தையும் பிரமாண பத்திரமாக இன்று தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டபடி தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான விசாரணை செய்து தேர்தல் கமிஷன் பதில் சொல்ல வேண்டும். ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும்படி வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள், தில்லுமுல்லுகள் இருக்கும்பட்சத்தில் காங்கிரஸ் ஏன் தகுந்த நீதிமன்றத்தை அணுகி வழக்குத் கொடுக்கவில்லை? வேறு ஏதேதோ விஷயங்களில் நீதிமன்றம் சென்ற கட்சி இந்த விஷயத்தில் ஏன் தயங்குகிறது? உண்மை எதுவென்று வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும்.


Narayanan Muthu
ஆக 08, 2025 08:20

திருடர்களையே நீதிபதியாக்கும் உங்கள் முயற்சியின் உள்நோக்கம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 08, 2025 07:35

அச்சிட்ட காகிதத்தில் வாக்காளர் தரவுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை தர மறுப்பது ஏன்? வாக்குச்சாவடி சிசிடிவி ஆதாரங்களை 45 நாட்களில் அழிக்க வேண்டிய அவசியம் என்ன? முட்டுக் கொடுக்கும் சங்கிகள் இதற்கு பதிலளித்தால் போதும்.


vivek
ஆக 08, 2025 07:56

கோர்ட் கழுவி உத்தினா சரியாகும்


Nagarajan D
ஆக 08, 2025 10:00

நண்பரே கேடுகெட்ட காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பர செட்டியார் தோல்வி என்று எண்ணிக்கை முடிந்த பின் இத்தாலிய அம்மையாரால் பதவியில் அமர்த்தப்பட்ட நவீன் சாவ்லா ராஜ கண்ணப்பன் தான் தோற்றுவிட்டார் இந்த திருட்டு செட்டியார் வெற்றி என அறிவித்தது ஞாபகமில்லையா உங்களுக்கு வழக்கம் போல நீதிபதி பதவிகள் ஏலம் விட்டு கல்லாகட்டி சிதம்பர ஜாமீன் செட்டியார் வென்றதாக தீர்ப்பை விலை கொடுத்து வாங்கினாரா இந்த கள்ள செட்டியார் அதை போலவா இன்று நடக்கிறது?


GMM
ஆக 08, 2025 07:03

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி. அதன் வெற்றி கேள்வி குறி ஆகும். ராகுல் கோரிக்கை படி ஆட்சியை கலைத்து மறு தேர்தல் வைக்க வேண்டும். ராகுல் சொல்லும் தொகுதி 2009 முதல் பிஜேபி வென்று வருகிறது? பெங்களூர் அதிக புதிய குடியிருப்புகள் உருவாகும் நகர். புதிய வாக்காளர் சேர்வர். மாநில அரசு ஊழியர்கள் தான் வாக்காளர் விவரம் சேகரிப்பு. இரட்டை பதிவு, ஒருவருக்கு பல ஊர்களில் ஓட்டு போன்ற குறைகள் ஆதார் இணைப்பு தடுக்க பட்டதால் உருவாகும். தற்போது ஆன்லைன் பதிவு. அதில் உள்ள குறைபாட்டை தேர்தல் ஆணையம் தணிக்கை செய்து வருகிறது. 100 சதவீதம் எப்போதும் சரியாக இருக்காது.


Srinivasan Srisailam Chennai
ஆக 08, 2025 05:58

இவர் சொல்லும் பொய்யை பலமுறை தேர்தல் கமிஷன் நிரூபித்த பிறகும் இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் இவரை என்ன செய்வது? இவர்களது தோல்விக்கு காரணம் லஞ்சம் ஊழல் இவர்களது தகுதியற்றஆட்சி முறை, இதை இவர்கள் உணராத வரை இவர்களுக்கு வெற்றி கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை