உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்ட வழக்கு: மே 15ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைப்பு

வக்ப் சட்ட வழக்கு: மே 15ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, மே 15ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு சொத்துரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கியது.இதை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று வழக்கு விசாரணையின் போது அறிவித்தார்.தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கு குறித்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியிருப்பதாவது:இந்த வழக்கு மே 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணை தேவைப்படும் . கடந்த விசாரணையில், வக்ப் சட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை அமர்வு கவலை தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டிற்கு உறுதியளித்தது.மனுதாரர்களால் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதைக் கையாள வேண்டும். அந்த அடிப்படையில் புதிய தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் விசாரிப்பதற்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
மே 05, 2025 19:55

தள்ளுபடி செய்திருக்கலாமே! நாட்டு நலன் பற்றியும் பெரும்பான்மை மக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம்.


Gopal
மே 05, 2025 18:54

உச்ச நீதி மன்றம் தேவையில்லாத ஆணியய் புடுங்குகிறது.


Gopalan
மே 05, 2025 18:25

நில உரிமை சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நாடு விடுதலை அடையும் போதே இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானில் குடி பெயர்ந்திருந்தால் வக்பு சட்டம் தேவையற்றது மேலும் முகலாயர்கள் ஆக்கிரமிப்பிற்கு முன் இந்த சொத்துக்கள் இந்து மன்னர்களுக்கு உரிமையாக இருந்தன.


GMM
மே 05, 2025 17:23

சொத்துரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகளை எப்படி உள்ளடக்கியது.? விலை கொடுத்து வாங்கிய சொத்தை மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். இதற்கு சட்ட பாதுகாப்பு ஏற்கனவே இருக்கு. நாட்டில் மத சார்பின்மை என்றால் இஸ்லாமியர் போல் இந்து, கிறித்துவ, புத்த… மக்களுக்கு ஆங்கிலேயர் வாரியம் உருவாக்கி இருக்க வேண்டும். வக்ஃபு சட்டம் 1947 பின் நீக்கி இருக்க வேண்டும். கூட்டாட்சி முறை சட்டத்தில் இல்லை. தேசிய பாதுகாப்பு கொடுக்கும் மத்திய ஆட்சியின் கீழ் ஆட்சிமுறை


சமீபத்திய செய்தி