உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி: வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு ‛ இண்டியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனஇம்மசோதா குறித்து லோக்சபாவில் அக்கட்சி எம்பிக்கள் பேசியதாவது:

தேர்தலை மனதில் வைத்து

காங்கிரஸ் கட்சி எம்.பி., வேணுகோபால் பேசியதாவது: இந்த மசோதா அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பு, மத சுதந்திரம் மீதான தாக்குதல். மற்ற மதத்தினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். ஹிந்து கோயில்களை நிர்வகிக்கும் அமைப்பில் ஹிந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியுமா? மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அநீதி

சமாஜ்வாதி எம்.பி., பேசுகையில், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இம்மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை எடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இம்மசோதா மூலம் அரசியலமைப்பின் ஆன்மாவை கொல்ல முயற்சி செய்கிறது. முஸ்லிம் மக்களுக்கு ஏன் அநீதி இழைக்கிறீர்கள். அவர்களின் சுதந்திரத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?

அச்சம்

தி.மு.க.., எம்.பி., கனிமொழி பேசியதாவது : பார்லிமென்ட் வரலாற்றில் இந்நாள் துயரமான நாள். இம்மசோதா அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது. மத ரீதியிலான சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. பல்வேறு மொழி, மதம் உள்ளிட்டவற்றை கொண்ட நமது மதச்சார்பற்ற நாடு என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25,26 ஐ மீறுவதாக இம்மசோதா உள்ளது.முஸ்லிம் இல்லாதவரை வக்பு வாரியங்களில் இடம்பெறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து கொண்டு வரப்பட்டு உள்ளது. சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பது குறித்த அச்சம் உருவாகி இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மீறுவதாக உள்ளது. ஹிந்து கோயில் தொடர்பானவற்றில பிற மதத்தவரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக எப்படி சேர்க்க முடியும்

தவறு

தேசியவாத காங்., கட்சியின் சுப்ரியா சுலே பேசும்போது, விவாதம் இல்லாமல் இம்மசோதாவை கொண்டு வந்தது தவறு. நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளது. மசோதாவில் குறிப்பிட்ட அம்சங்கள் மீடியாவில் கசிந்தது எப்படி? இதனை திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்.

அதிகாரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது பஷீர் பேசுகையில் அனைத்து அதிகாரங்களும் மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மதசார்பற்ற தன்மையை பாதிக்கும்

உள்நோக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசியதாவது: உள்நோக்கத்தோடு இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அன்னியர்களை போல் காட்டும் முயற்சி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது வழங்கிய சுதந்திரம், உரிமைகளை தட்டிப்பறிக்கக்கூடிய வகையில் வேண்டும் என்று திட்டமிட்டு தலையிடுகிறது. வக்பு போர்டு தனித்து இயங்கி வருகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் அந்த சுதந்திரம் உள்ளது.அரசியலமைப்பு சட்டம், மதசார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் நிலையில்,அரசு மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது, மதங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆபத்தானது. மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடியது. இம்மசோதாவை திரும்பப்பெற வேண்டும் அல்லது பார்லிமென்ட் நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

சவால்

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் பேசுகையில், இம்மசோதா எப்படி முஸ்லிம் மதத்திற்கு எதிரானது. இது வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறது. முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப ஹிந்துக் கோயிலுடன் இம்மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. இந்திரா கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதை காங்கிரசின் வேணுகோபால் விளக்குவாரா? ஆனால் தற்போது அவர்கள் சிறுபான்மையினர் குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Thiruvengadam Ponnurangam
ஆக 16, 2024 17:51

இங்க ஒரு மண்ணு புரிதல் இல்லாமல் ஓட்டுக்காக கத்தும் இவர்களை மக்கள் மன்னிக்க கூடாது. கொள்ளை அடித்து சம்பாதித்த உங்கள் சொத்தை தானமாக தாருங்கள் பாப்போம். இவனுங்க கொள்ளை அடிக்க பங்கு போட்டுக்க எத்தனை திட்டம். மக்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு


spr
ஆக 13, 2024 07:09

"ஹிந்து கோயில் தொடர்பானவற்றில பிற மதத்தவரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக எப்படி சேர்க்க முடியும்?" அறியாமல் பேசுகிறார் திருப்பதி கோவிலில் அண்மைக்காலம் வரை பிறப்பினால் இந்துவாக இருந்து பின் கிருத்துவராக மாறியவர் எனக் கூறப்பட்ட ஒருவர்தான் பொறுப்பில் இருந்தார் Jagan appoints his uncle YEHOVA VINCENT Subba reddy YV SUBBARADDY a staunch Evangelist as chairman of TIRUPATI TUMALA BALAJI TEMPLE, richest Hindu shrine He works to spread more CHURCHES in Andhra," அனைத்து தென் இந்திய மாநிலங்களிலும் இந்துக்கள் உரிமை அரசால் பறிக்கப்படுகிறது உண்மையே


xyzabc
ஆக 13, 2024 06:44

கனி மா, திருமா கொஞ்சம் பங்களாதேஷ் பக்கம் போயிட்டு வா. நீ எல்லாம் வெட்க கேடு .


Venkatesan Srinivasan
ஆக 12, 2024 08:38

தயவுசெய்து "இண்டி" கூட்டு என்று மட்டும் குறிப்பிடவும். இந்தியா - பாரதத்தை இழுக்க வேண்டாம்.


Venkat, UAE
ஆக 12, 2024 14:49

மிகவும் சரியான கமெண்ட். இண்டி கூட்டணி என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி அல்ல.


Minimole P C
ஆக 12, 2024 07:45

....perferable.


sethu
ஆக 11, 2024 09:16

இந்தாம்மா கனிமொழி மணிப்பூருக்கு கிருத்துவத்தை காக்க ஓடினாய் ஆனால் பங்களாதேஷ் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு இப்படி என் குரல் கொடுக்கவில்லை. உன்னையெல்லாம் கழுமரத்தில் ஏற்றனும் அல்லது சிலுவையில் அறையனும் .


N DHANDAPANI
ஆக 10, 2024 17:58

எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் திசை திருப்புவனாக உள்ளன என்பது தெளிவு ஏனென்றால் குருவாயூர் மற்றும் ராமர் கோயில் நிர்வாக அமைப்புகளுக்கு நிலங்களை எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லையே இன்னும் சொல்லப்போனால் வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இந்த அதிகாரம் இல்லை அரசே ஒரு வழிமுறைப்படி தான் இதைச் செய்ய முடியும் என்பதை சவுரியமாக மறைக்கிறார்கள்


Ganesun Iyer
ஆக 09, 2024 17:56

ஈரானில் திருமணத்திற்க்கு பெண்ணின் வயது 9 ஆக குறைப்பு.. போராளிகள்ஸ் வாய் திறக்கலாம்..


Anantharaman
ஆக 09, 2024 10:58

இந்திய குடி மக்களின் சத்துக்களை முகலாயர் காலம் முதல் பிடுங்கிய இஸ்லாமியரும் கிறிஸ்துவ சபைகளும் ஏதோ வக்ஃப் சத்துக்களும் உரிமை கோருவது அநியாயம். CSI, WAKF BOARD சொத்துக்கள் தேசிய உடமையாக்கப் பட வேண்டும்


sethu
ஆக 11, 2024 09:13

நல்ல கருத்து இதைத்தான் இந்தியா அரசு செய்யணும் ஆனால் காங்கிரசு நேரு முதல் ராகுல் வரை இந்து விரோதமாக இந்துக்களின் சொத்துக்களை மற்ற மதத்தவர்களுக்கு பிடிங்கி கொடுத்து ஒரு கேடுகெட்ட துரோகத்தைத்தான் செய்கிறார்கள் என்பதை இந்துக்கள் இன்னும் புரியாமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு அழிந்து போகிறார்கள் .


Mr Krish Tamilnadu
ஆக 08, 2024 23:00

மதம் சம்பந்தப்பட்ட அவர் அவர் வழிபாட்டு தலங்களின் கணக்கு வழக்குகள் வேண்டும். சொத்து விபரங்களிலும் தேவை ஏற்படும் போது, கலெக்டர் மூக்கை நுழைக்க முடியும். அவ்வளவு தானே. விசயத்திற்கு வருவோம். இந்து கோவில் சொத்துக்கள் எப்போது அரசாங்க கண்ட்ரோலுக்கு போனது. கோவில் அரசு நிர்வாக அதிகாரி, கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா?. இன்னொன்று பழமையான கோவில்களை ஏன் தொல்பொருள் ஆராய்ச்சி கைப்பற்றுகிறது. இதில் யாருடைய மதச்சம்பந்தப்பட்ட உணர்வுகளும், பாதிக்க வில்லையா?.மத்திய அரசுக்கு நிர்வாக சிக்கல், யாரோ ஏற்படுத்திய விதி. இன்றைய சூழலுக்கு மாறுதலுக்கு அனுமதி கேட்கிறது. கறுப்பு பணம் என்பது என்ன? உழைத்து நேர்மையாக ஒய்வில்லாமல் சம்பாதித்தாலும், கணக்கு கட்டாத பணம் கருப்பு பணம். எத்தனையோ தனியார் நிலங்கள், சாலை விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி என பல காரணங்கள் மூலம், நாட்டுக்கு நல்லது என வலுக்கட்டாயமாக கையாக படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் இதை போன்ற அமைப்பு தன்னிச்சையாக செயல்படுகிறாத? மேற்கோள் காட்டுங்கள். எதிர்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என்று அர்த்தம் அல்ல. உள்நோக்கம் உள்ள ஷரத்துகளை நீக்க முறையிடலாம். நெருக்கடியான சாலை போக்குவரத்து அருகில் உள்ள வழிபாட்டு தலங்கள், நாய்ஸ் பொலிஷசனை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட பிஸி நேரத்தில் ஏற்படுத்தாதீர்கள் எனவா மத்திய அரசு கூறுகிறது. நிர்வாக சிக்கல்கள் தீரட்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை