உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் திருத்த மசோதா: ராஜ்யசபாவில் 128 எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்

வக்ப் திருத்த மசோதா: ராஜ்யசபாவில் 128 எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில் நீண்ட விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்ட சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=32u0mb5z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று முன்தினம் (ஏப்.,2) பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர். லோக்சபாவில், 12 மணி நேர விவாதத்துக்கு பின், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நள்ளிரவு 1:00 மணி அளவில் நடந்தது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்த நிலையில் 232 பேர் எதிர்த்து ஓட்டளித்தனர். இதையடுத்து மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.இந்நிலையில் நேற்று (ஏப்.03) ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராஜ்யசபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது 13 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்று. நள்ளிரவு 2 மணியளவில் விவாதம் நிறைவடைந்தது. பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.ராஜ்யசபாவின் தற்போதைய எண்ணிக்கை 236 ஆகும். பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு (பா.ஜ.,98; ஜேடியூவின் 4; அஜித்பவார் என்சிபி 3; தெலுங்குதேசம் கட்சியின் 2 ) உள்ளிட்ட மொத்தம் 125 எம். பி., க்கள் ஆதரவு உள்ளது. ஆனால் இந்தியா கூட்டணிக்கு ராஜ்யசபாவில் மொத்தமே 88 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது .இந்நிலையில் . நள்ளிரவு 2:45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. எதிராக 95 பேர் ஓட்டளித்தனர்.இண்டி கூட்டணி அல்லாத எதிர்கட்சிகளான, பி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் வக்ப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி.,க்கள், மனசாட்சிப்படி ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். தமிழக கட்சிகள் யாருக்கு ஆதரவு?தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வக்ப் மசோவிற்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., எதிராக ஓட்டளித்துள்ளன. அதேநேரத்தில் பா.ம.க., வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vns
ஏப் 04, 2025 10:27

தயவு செய்து வக்ப் சட்டத்தை எதிர்த்த ஒரு இந்து உறுப்பினருக்கும் இந்துக்கள் வாக்களிக்காதீர்கள். நாத்தீகம் பேசும் திமுக கொண்டுவந்த வக்ப் போர்ட சட்ட திருத்தங்கள் பத்துக்கும்.மேல். இவர்கள் இந்து விரோதிகள்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 10:43

எதற்கு ஒரு மதத்தின் விரோதிகள் என்று மாத்திரம் கூறுகிறீர்கள், இவர்கள் தமிழ் நாட்டின் விரோதிகள் என்று கூறுங்கள், இன்று வரை தமிழ் சந்ததியினர் மீது இவர்கள் ஏற்றி வைத்திருக்கும் கடன் மாத்திரம் எவ்வளவு என்று பார்த்தல் இவர்களை நீங்க தமிழ்நாட்டின் துரோகிகள் என்று அறிய முடியும் ?


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 07:23

விவசாய நிலத்தை ஒரு குழு அபிஷியலா திருடலாம் என்று இருந்ததை மாற்றி அமைத்த அரசுக்கு நன்றி , அந்த திருடர்களுக்கு ஆதரவளிக்கும் எந்த கட்சியினரையும் அபிஷியலை திருடர்கள் கழகம் என்றும் கூறலாமா ?


ramani
ஏப் 04, 2025 07:17

வாழ்த்துக்கள் மத்திய அரசுக்கு தொடரட்டும் தங்களின் சிறப்பான பணி


visu
ஏப் 04, 2025 06:51

எந்த சொத்தையும் வக்ப் ஆக்கிரமிக்கலாம் என்று காங்கிரஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தபோது இந்த காட்சிகள் எதிர்க்க வில்லை இப்ப அந்த தவறை சரிசெயும் பொது எதிர்கிறார்ங்க எந்த அளவு சிறுபாண்மை தாஜா செய்யும் மனப்பான்மை


Oru Indiyan
ஏப் 04, 2025 06:41

மனசாட்சி இல்லாமல் எல்லா நிலங்களையும் அபகரித்த திருடிய கொள்ளையடித்த கும்பல் இனி அடங்கும்


Kacha Theevai Meetpom
ஏப் 04, 2025 05:20

இன்னா 40 இனிய 40 கதைக்கு ஆகலியே


Mohanakrishnan
ஏப் 04, 2025 06:14

கேண்டினில் கிளாஸ் கழுவ உதவும்


இராம தாசன்
ஏப் 04, 2025 03:38

இண்டி கூட்டணி தலைவர்கள் என்று கூறி கொள்ளும் ராகுல் கான் குடும்பம் வோட்டு போடவில்லை .. அப்புறம் எதுக்கு எல்லோரும் கூவுறாங்க


Kasimani Baskaran
ஏப் 04, 2025 03:36

எந்த தனியார் சொத்தையும் வக்ப் வாரியம் ஆக்கிரமிக்கலாம் என்று இருந்த கெடுதல் இன்றோடு நீங்கியது நல்லதொரு மாற்றம். காங்கிரஸ் நாட்டுக்கு செய்த மிகப்பெரிய கெடுதலில் இருந்து இந்துக்கள் வெளியேறிவிட நல்ல ஆரம்பம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த நாடே நரேந்திர மோதிக்கு கடமைப்பட்டு இருக்கிறது.. அனைவர்களின் தூற்றல்களில் இருந்து இஸ்லாமியர்களை ஓரளவுக்கு பாதுகாக்கவும் வாய்ப்புண்டு. 11 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இருக்கிறது - அதை சரி செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை