உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலுக்கும், வளர்ச்சிக்குமான போர்!

ஊழலுக்கும், வளர்ச்சிக்குமான போர்!

பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த அரசு, ஊழலிலும், வாரிசு அரசியலிலும் திளைத்தது. இப்போதைய அரசு, வளர்ச்சியை மட்டுமே இலக்காக வைத்து செயல்படுகிறது. நடக்க உள்ள லோக்சபா தேர்தல், ஊழல், வாரிசு அரசியலுக்கும், மறுபக்கம் வளர்ச்சிக்கும் இடையேயான போர்.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

கமல்நாத் தேவையில்லை!

பா.ஜ.,வுக்கு கமல்நாத் தேவையில்லை. அதனால் தான் அவருக்கு பா.ஜ.,வின் கதவுகள் திறக்கப்படவில்லை. காங்கிரசிலும் அவர் தேவையற்றவர் ஆகிவிட்டதால், அந்த கட்சியினரின் எதிர்காலம் இருண்டு போய் உள்ளது.கைலாஷ் விஜய்வர்கியா, ம.பி., அமைச்சர்,பா.ஜ.,

பிரச்னைகளை முன்வைக்கிறோம்!

ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விலைவாசி போன்ற பிரச்னைகளை அடிப்படையாக வைத்து அரசியல் செய்கிறது. நாங்கள் மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பதில்லை.திக்விஜய் சிங், ராஜ்யசபா எம்.பி., -காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை