உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கொரோனா தொற்றை ஏற்படுத்திய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு வகை வைரஸ், வவ்வால்களிடம் காணப்படுகிறது. தற்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும், இது உருமாறி மனிதர்களை தாக்கினால், கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

கடந்த, 2019ல் சீனாவில் முதலில் தென்பட்ட, கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wsf26wnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் தாக்கம் தற்போதும் தொடர்கிறது. தற்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் காணப்படுகிறது.இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், புதிய வகை பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனாவுக்கு முன்பாகவே, 'மெர்ஸ்' என்ற வகை வைரஸ் ஏற்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் பரவவில்லை. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில், 33 சதவீதம் பேருக்கு மரணத்தை விளைவித்து உள்ளது.இதன் அடுத்த வடிவமாகவே, கொரோனா வைரஸ் ஏற்பட்டது. 'சார்ஸ் கோவிட்' எனப்படும் இந்த வைரஸ், வெகு வேகமாக உலகெங்கும் பரவியது.தற்போது இதுபோன்ற, எச்.கே.யு., - 5 என்ற கொரோனா வகை வைரசின் மற்றொரு வடிவம், சீனா மற்றும் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தற்போதைக்கு வவ்வால்களில் காணப்படும் ஒரு துணை வகை வைரசாகும். ஒரு சிறிய மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்தால், உலகளாவிய பெருந்தொற்றை உருவாக்கும் அபாயம் உள்ளது.கொரோனாவைப் போலவே, இதுவும் சுவாச மண்டலத்தின் வாயிலாக மனிதர்கள் உடலுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.

ஆதாரங்கள்

எச்.கே.யு., 5 வகை வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அவை செல்களை பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் இல்லை. ஆனால், அதற்கான திறன், இந்த புதிய வைரசுக்கு உள்ளதால். அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

dinesh
ஜூன் 08, 2025 15:16

ஏன் மதத்தை பேசுற . மூளை பயன்படுத்து . மருந்து கம்பெனி வியாபாரம் இது.இந்த உலகத்தில் கிருமியை இல்லை. எல்லாம் பொய் , வியாபாரம் , பென்ஷன் காசை சுருட்ட ஒரு ஏற்பாடு , மருத்துவ கொள்ளை மானுட கொலை , தண்ணீரில் கெமிக்கலை பரப்பி நோய் உண்டாகி , பண்டமிக் என்கிறான் .


Iyer
ஜூன் 08, 2025 07:03

எப்படிப்பட்ட வைரஸ் தாக்கினாலும் குணப்படுத்த ஒரே வழி - 2-3 நாள் சுடுதண்ணீர் மாத்திரம் குடித்து உண்ணாவிரதம் இரு. 3 ம் நாள் வைரஸ் ஓடிவிடும். பசித்தால் இளநீரும் ஆரஞ்சு ஜூஸ் மாத்திரம் குடிக்கலாம். டாக்டரை காண சென்றாலோ, மருந்து மாத்திரை சாப்பிட முயற்சித்தாலோ, பெரிய பெரிய ஆஸ்பத்ரிகளுக்கு போனாலோ - உன்பணத்தை பிடிங்கி, மொட்டை அடித்து பாடை கட்டிவிடுவார்கள். "லங்கனம் பரம் அவுஷதம்" - உண்ணாவிரதம் போல் சிறந்த மருந்து எதுவும் இல்லை.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 06:18

ஜனநாயகத்தையும் அதனை சார்ந்த மக்களையும் வீழ்த்தும் இரு மதங்களை விட வேறெதுவும் வைரஸ் இருக்கா ?


பிரேம்ஜி
ஜூன் 08, 2025 07:52

நல்ல கேள்வி! மதம்தான் பெரிய ஆட்கொல்லி வைரஸ்!


J.Isaac
ஜூன் 08, 2025 19:02

பணம், பதவி பெற மதம் பிடித்து மனித உருவில் அலைகிற மாக்கள் தான் காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை