உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.பி.,க்கு அமைச்சர் எச்சரிக்கை

பா.ஜ., - எம்.பி.,க்கு அமைச்சர் எச்சரிக்கை

கொப்பால்: பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேவுக்கு, அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கன்னடம் மற்றும் கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கொப்பாலில் நேற்று அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா பற்றி பேசுவதை, பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே, இத்துடன் நிறுத்த வேண்டும். இது, அவருக்கு நாங்கள் விடுக்கும் கடைசி எச்சரிக்கை. சித்தராமையாவின் கால் துாசுக்கு, அவர் வர மாட்டார். மரியாதை தெரியாமல் பேசும் நாய்களுக்கு, மரியாதையுடன் பேச நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.அனந்த்குமார் ஹெக்டேயை விட, எங்களுக்கும் தரம் தாழ்ந்து பேச தெரியும். வடமாவட்ட பாஷையில், அவரை திட்டவும் தெரியும். ஆனால், எங்கள் கட்சி கலாசாரம் அது இல்லை. ராமர் கோவிலை வைத்து, பா.ஜ.,வினர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை