உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்

மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்

பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்புகள் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம் என்று, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் யோசனை வழங்கி உள்ளார்.பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:பெங்களூரு கடந்த 15 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு நிகரான வளர்ச்சியை கண்டு உள்ளது. நாட்டில் அதிக மக்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1.40 கோடி மக்களுக்காக தினமும் 145 கோடி லிட்டர், காவிரி நீர் வழங்கி வருகிறோம்.ஆழ்துளை கிணறுகள் மூலமும் மக்கள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்திய மக்கள், காவிரி நீரை நம்பி உள்ளனர். இதனால் எங்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது.

1,700 டேங்கர்கள் பதிவு

நகருக்கு தேவையான தண்ணீரை வழங்க, குடிநீர் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. எதிர்கால நலன்கருதி மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியம். பல அடுக்குமாடி குடியிருப்புகளில், மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பது, தெரிய வந்து உள்ளது.மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். மழைநீரை சேமிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளே, தரமான அடுக்குமாடி குடியிருப்பு என அங்கீகரிக்க முடிவு செய்து உள்ளோம்.தண்ணீர் வினியோகம் செய்ய 1,700 டேங்கர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த டேங்கர்களில் தண்ணீர் கட்டண பட்டியல், தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து தயாரிக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மற்றவர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார். ஏப்ரல் 1 ம் தேதி முதல் அதிகாரபூர்வ சுற்றறிக்கை வெளியிடப்படும்.இவ்வாறு அவர்பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மார் 17, 2024 09:30

ஒரு சயின்டிஸ்ட்டின் குரல்.. அன்றைய ராம்நாத் மாவட்டத்தில் உள்ளேன். தண்ணீர் அருமை எங்களுக்கு நன்கு தெரியும். தற்போது உள்ள தண்ணீர் பற்றாக்குறை மக்களால் ஏற்படுத்தப் பட்டது. முதலில் கடுமையான சட்டங்கள் இயற்றவேண்டும். போரெவெல், கிணறு, ஆறு எடுக்கப்படக்கூடிய தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விர்ஜின் நீராக குடிக்கவும், சமையலுக்கும் மட்டும் பயன்படுத்தப்படவேண்டும். துணி துவக்க, குளிக்க, சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீரை மட்டும் பயன்படுத்தவேண்டும். இதனால் பூமியின் நீர் பாதுகாக்கப்படும். தண்ணீர் தேவை நன்கு சமாளிக்கலாம். சிங்கப்பூரை பாருங்கள். தண்ணீரை மலேசியால் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு குடிக்க விநியோகம் செய்கிறார்கள். பெங்களூரில் இது நிச்சயம் இயலும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை