உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம்: அமித் ஷா பெருமிதம்

ஆமதாபாத் : ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உட்பட, நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்களில் பெரும்பாலானவற்றை, கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள, குஜராத் பல்கலை மைதானத்தில், 'ஹிந்து அத்யாத்மிக் சேவா மேளா' எனப்படும், ஹிந்து ஆன்மிக கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஹிந்துக்கள், சொந்த நாட்டில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்கிய காலம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. முத்தலாக் ஒழிப்பு, பொது சிவில் சட்டம் அமல் போன்ற நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் தொடத் தயங்கிய பணிகளை, மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது.தொடர்ச்சியான இந்த மூன்றாவது ஆட்சியிலும் அதே பாதையில் தொடர்வோம். இதுபோன்ற கண்காட்சி வாயிலாக, சேவை மனப்பான்மை உடைய ஹிந்து அமைப்புகளை ஒரே குடையின் கீழ் இணைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ray
ஜன 24, 2025 08:57

புது அசைன்மெண்ட்டா பதினைந்தாயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து காந்தி கணக்கில் ஏப்பம் போடற வேலைதான் பாக்கி இதை பாத்து ட்ரம்ப்பும் காப்பி அடிச்சுட கூடாதுப்பா


vivek
ஜன 24, 2025 08:19

வேலை செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...எந்த வேலையும் செய்யாமல் கிண்டல் செய்து சுற்றி திரியும் சில பரட்டைகளும் இருக்கிறார்கள்


அப்பாவிராஜ்
ஜன 24, 2025 07:34

ஆம். எல்லோருக்கு வேலை, வூடு குடுத்து பாஞ்சி லட்சம் போட்டுட்டம்.


baala
ஜன 24, 2025 10:00

உழைக்காமல் பிழைப்பதா. வேண்டாமே. நாம் மனிதர். அரசியல் எத்தர்கள் பிழைப்புக்காக சொல்லுவதை நாம் மனிதர்கள் கேட்க வேண்டாமே. அரசியல் சாக்கடைகள் எதை வேண்டுமானாலும் சொல்லும்.


kulandai kannan
ஜன 24, 2025 07:18

நக்ஸல் அட்டகாசத்தைப் பெருமளவு ஒடுக்கியது முக்கிய சாதனை.


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:07

பொது சிலவில் சட்டம், நீதித்துறையை சீரமைப்பது போன்றவை தொய்வில்லாமல் நிறைவேற்றப்படவேண்டியது இந்தியாவின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் மிக அவசியம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் அளவில் ஓவராக ஆட்டம் போடும் மாநிலங்களை கட்டுப்படுத்துவதும் கூட முக்கியமானது.


தாமரை மலர்கிறது
ஜன 24, 2025 02:05

பிஜேபி ஆட்சியில் உலக நாடுகள் அச்சபடும் வகையில் இந்தியா புலிப்பாய்ச்சலில் பொருளாதார வேகமெடுத்துள்ளது. ஒரு சாதாரண மாணவனின் பாக்கெட்டில் கையை விட்டால் கூட ரெண்டாயிரம் ரூபாய் எடுக்கலாம். ட்ரடு தொழில் தெரிந்த இளைஞர்களின் சுவர்க்கமாக இந்தியா திகழ்கிறது. மிக எளிதில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் சம்பாரிக்கிறார்கள். ட்ரடு தொழில் தெரியாத வெறும் பேனாவை பிடித்து மேனாமினிக்கி வேலை செய்யப்படும் இளைஞர்களே வேலை இல்லை என்று புலம்பி வருகிறார்கள். வேலை தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிகின்றன. முதலாளிகள் நல்ல தொழிலாளி கிடைக்காமல் தவிக்கிறார்கள்.


baala
ஜன 24, 2025 10:01

சரியாக வேலை செய்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை