உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உருவாக்க தெரிந்த எங்களுக்கு... தெரியும்!: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாக்.,கிற்கு கடும் எச்சரிக்கை; ஒவ்வொரு அங்குலத்தையும் குறிவைக்க பிரமோஸ் ஏவுகணையால் முடியும்

உருவாக்க தெரிந்த எங்களுக்கு... தெரியும்!: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாக்.,கிற்கு கடும் எச்சரிக்கை; ஒவ்வொரு அங்குலத்தையும் குறிவைக்க பிரமோஸ் ஏவுகணையால் முடியும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ:''பயங்கரவாதத்துக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வெறும் 'டிரெய்லர்' மட்டுமே. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல நிலமும், பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் உள்ளது. அந்நாட்டை உருவாக்க தெரிந்த எங்களால்... என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்,'' என்று குறிப்பிட்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'பாகிஸ்தானை உருவாக்கிய இந்தியாவுக்கு, அழிக்க எவ்வளவு நேரமாகும்?' என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் லக்னோவில், 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தப்பிக்க முடியாது

இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த முதல் தொகுதி பிரம்மோஸ் ஏவுகணைகளை, முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வெற்றி என்பது நமக்கு சம்பவம் அல்ல; அது ஒரு பழக்கமாகி விட்டது என்பதை ஆப்பரேஷன் சிந்துார் நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல நிலமும், பிரம்மோஸ் ஏவுகணையின் இலக்கை எட்டக்கூடிய துாரத்தில் உள்ளது. இனி, அந்நாடு பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து தப்பிக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் வெறும் டிரெய்லர் மட்டுமே. அந்த டிரெய்லரே, நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தி விட்டது. அந்நாட்டை உருவாக்க தெரிந்த எங்களால்... என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். நம் முப்படைகளின் முழு பலமும் வெளிப்பட்டால் என்ன நடக்கும் என்பதை, நான் சொல்ல விரும்பவில்லை.

முதுகெலும்பு

ஆப்பரேஷன் சிந்துார் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை என்பது ஓர் ஆயுத அமைப்பு மட்டுமல்ல; நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்களின் சின்னம். வேகம், துல்லியம், சக்தி போன்றவற்றின் கலவையே பிரம்மோஸ் ஏவுகணை. இது, உலகின் சிறந்த அமைப்புகளில் ஒன்று. ராணுவம், கடற்படை, விமானப் படையின் முதுகெலும்பாக பிரம்மோஸ் ஏவுகணை மாறியுள்ளது.

உற்பத்தி மையம்

ராணுவ உற்பத்தி மையமாக லக்னோ உருவெடுத்துள்ளது. இது, உ.பி., ராணுவ வழித்தடத்தின் ஆறு மையங்களில் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன், நாட்டின் மிக நவீன ஏவுகணைகள் லக்னோவில் இருந்து தயாரிக்கப்படும் என்று, யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? ஆனால் இன்று, அந்த கனவு நனவாகி உள்ளது. உதிரி பாகங்களுக்காக வெளிநாடுகளை நம் நாடு இனி சார்ந்திருக்கக் கூடாது. இதற்காக சிறு தொழில்களை வலுப் படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ராஜ்நாத் சீற்றத்துக்கு என்ன காரணம்? ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தானை நம் ராணுவம் பந்தாடியது. பலத்த சேதத்தை சந்தித்த போதும், எதுவுமே நடக்காதது போல, அந்நாடு, 'பில்டப்' காட்டியது. பாக்., ராணுவ தளபதி அசிம் முனீரும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து நட்பு பாராட்டினார். இது தவிர, 'சிந்து நதி நீர் பாக்., வருவதை தடுக்க ஜம்மு - காஷ்மீரில் இந்தியா அணை கட்டினால், ஏவுகணைகள் வைத்து அதை தகர்ப்போம்' என்றும் அசிம் முனீர் பேசினார். பாகிஸ்தானுக்கும், தலிபான்கள் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எல்லையில் சமீப காலமாக மோதல் நடந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தலிபான்களை இந்தியா துாண்டி விடுவதாக பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசினார். ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். பாக்., ராணுவ தளபதி அசிம் முனீரின் இந்தியாவுக்கு எதிரான அவதுாறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'பாகிஸ்தானை உருவாக்க தெரிந்த இந்தியாவுக்கு, அழிக்க எவ்வளவு நேரமாகும்? என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தலைவர்களின் வாய்க்கொழுப்பை அடக்கவே, அந்நாட்டை எச்சரிக்கும் வகையில் ராஜ்நாத் சிங் பேசியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMESH KUMAR R V
அக் 19, 2025 15:32

இதைவிட பெரிய எச்சரிக்கை ஒன்றுமில்லை


RAMESH KUMAR R V
அக் 19, 2025 13:57

இன்னும் திருந்தவில்லை திருத்துவோம்


aaruthirumalai
அக் 19, 2025 13:55

பழமையான அரசியல்வாதிகள் மூட்டபூச்சுக்கு பயந்து நாட்ட மூன்றாக பிரியும்படி செஞ்சீட்டாங்க இப்ப அத எப்படிங்க சரி செய்ய முடியும்.


Barakat Ali
அக் 19, 2025 09:35

பாகிஸ்தானிய ஆண்களுக்கு வாய்க்கொழுப்பும், பெண்களுக்கு ............. ..


Praveenkumar
அக் 19, 2025 11:49

பெண்களுக்கு???


Kasimani Baskaran
அக் 19, 2025 06:52

சென்ற முறையே வலிய வந்தவர்களை சாத்து சாத்து என்று சாத்தியிருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை