உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா

கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா

புதுடில்லி: நிலச்சரிவு ஏற்படும் , மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என கேரளாவை முன்கூட்டியே எச்சரித்தோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 7 நாளுக்கு முன்பே , ஜூலை 23ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24,25 ல் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 ல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். 2014க்கு பிறகு இந்த அமைப்புக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. ஆபத்தான பகுதிகளில் மக்களை வெளியேற்றாமல் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம். நிலச்சரிவு ஏற்படும் என தெரிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அமித்ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

பல்லவி
ஆக 01, 2024 09:27

அவங்க யோகம், இப்போ வடக்கே பெருமழை பெய்யுது இப்போ யாருகிட்டே சொல்வாங்க???


R Kay
ஆக 01, 2024 00:20

எச்சரிக்கைகளை இனி பொதுமக்களும் காணும் வண்ணம் MoH website-இலும் மற்றும் Tourism தளங்களில் advisory note ஆகவும் தொலைக்காட்சியிலும் இனி அறிவித்தல் நலம். மக்கள் அங்கு செல்வதை தவிர்ப்பார்கள். தெரிவித்த தேதி குறித்த அரசியலும் இருக்காது.


venugopal s
ஆக 01, 2024 00:00

மத்திய பாஜக அரசு கேரளாவில் மிகவும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் எந்த மாவட்டத்தில் இருக்கும் என்றும் குத்துமதிப்பாக சொல்லி இருக்குமே தவிர எந்த ஊரில் எந்த கிராமத்தில் அதி கன மழை பாதிப்பு ஏற்படும் என்றோ நிலச்சரிவு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் உண்டாகும் என்றோ சொல்லி இருக்க முடியாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சியோ டெக்னாலஜியோ நமது நாட்டில் இல்லை. அதனால் மாநில அரசைக் குறை கூறுவது பொறுப்பற்ற பேச்சு.இது அப்பாவி மக்களின் பிணங்கள் மீது கூட அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இழிவான செயல்.


Skn
ஜூலை 31, 2024 23:51

Red or orange alert from IMD should also be communicated to the elected representatives so that ruling or opposition can not blame each other


Mohanakrishnan
ஜூலை 31, 2024 22:59

RG was busy with rummy game and Thailand trip plan. Let us not disturb his busy schedules


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 31, 2024 21:41

இயற்கையை அழித்து தேயிலை பயிரிட்டால் என்ன செய்வது. ஆழ்ந்த அனுதாபங்கள். இனியாவுது இயற்கையை அழித்து விவசாயம் செய்வதை தவிர்ப்பீர்.


Mario
ஜூலை 31, 2024 20:31

கீழ்த்தரமான அரசியல்


vadula rama (Dr Ramasubramanian)
ஜூலை 31, 2024 19:46

இங்கே அமித் ஷாவை/மத்திய அரசைக் குற்றம் சொல்வதற்கு காரணமே இல்லை. அவர்கள் முன்னாலேயே எச்சரிக்கை செய்தது எல்லொருக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் கேரள அரசு அதைப் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி ஏன் இந்த விஷயத்தில் அச்டின் எடுக்கவில்லை? இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் எதேதோ சும்மா எழுதிவிடுகிரார்கள்


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 18:51

அலட்சியமானவர்களை ஒருபோதும் காப்பாற்றமுடியாது. வெள்ளம் வரும்போது குளிக்காதே என்றுதான் சொல்லமுடியும். போய் குத்தாட்டம் போட்டால், அனுபவித்து தான் ஆக வேணும். கேரளாவை கண்டுக்காமல் விடுவதே நல்லது. வயநாடு மக்கள் ராகுலை தேர்ந்தெடுத்ததன் விளைவை சந்தித்து வருகிறார்கள்.


Sekhar
ஜூலை 31, 2024 18:01

எதிர்காலத்தில் மத்திய அரசு இதேபோல் செய்திகளை மாநில அரசை நம்பாமல் செய்திகளை மக்களுககு வெளியிட வேண்டும். மாநில அரசை நம்பாமல் மக்களை செய்திகள் பார்த்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை