உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது. லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது. அமைச்சர் நேரு, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோர் அழைப்பு விடுத்தனர். கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

பங்கேற்பேன்

பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது.

வாழ்த்துகள்

முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள். எந்த காரணத்தை கொண்டும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், பா.ஜ., தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென் மாநிலங்கள் வழங்கி வருகின்றன.

அதிக வரி

வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் அதிக வரியை செலுத்துகின்றன. தென் மாநிலங்களில் பா.ஜ.,வை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை பா.ஜ., மேற்கொண்டுள்ளது. நடக்க போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. இது தென் இந்தியாவின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை ஆகும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
மார் 13, 2025 21:41

இன்டியா கூட்டணி ஆரம்பித்து முதல் கூட்டத்திலேயே பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடிக்காமல் ஒரே அடி அடித்துவிட்டார் ஹிந்தி கற்றுக்கொண்டு வா என்று அனைத்து முதல்வர்களும் கூடியிருக்கும்போது சொன்னது தலையில் அடித்தாற் போலிருந்தது இது தமிழ் நாட்டிற்கே இவரால் கிடைத்தது அவமானம். இன்னும் என்னதான் வேண்டும்


Ramesh Sargam
மார் 13, 2025 21:40

திமுக சாக்கடையில் விழுந்த அடுத்த பிராணி ரேவந் ரெட்டி. அது சரி, இனம் இனத்தோடுதானே சேரும்.


நிக்கோல்தாம்சன்
மார் 13, 2025 21:01

அந்த தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்னவென்று சொல்ல முடியுமா ?


visu
மார் 13, 2025 19:40

அது சரி டெமோகிராபி மாறுகிறது உ பி பீகார் மாநிலங்களுக்கு சீட் கூடுது அதனால் எதிர்க்கிறீங்க 1951 இல் ஹிந்துக்கள் 84% 2011 இல் ஹிந்துக்கள் 79.8% முஸ்லிம்கள் 9.8% வளர்ந்து 14.23% இது டெமோகிராபி மற்றும் வோட்டு விகிதங்களை மாற்றாதா இதை எதிர்த்து கேட்க மாட்டார்கள் ஏனென்றால் சிறுபான்மை ஒட்டு தேவை.


moulee
மார் 13, 2025 19:33

தெலுங்கன் நேரு தெலுங்கனப் போய் பார்க்கிறார் கன்னடிகன் goldenHair கர்நாடகா போறார் தமிழன் எங்கே…...?


Ram
மார் 13, 2025 15:24

நீங்கள் ஒன்னும் பண்ணமுடியாது , நம்ம constitution இல் சொல்லி இருப்பதைத்தான் செய்கிறார்கள் , நீங்கள் நீதிமன்ற படியேறினாலும் ஒன்னும் புடுங்கமுடியாது


saravan
மார் 13, 2025 14:29

ஏண்டா...மக்கள் பிரச்சினைகளுக்கு இதுபோல் துள்ளிக் குதித்ததுண்டா...


sankar
மார் 13, 2025 13:21

தொன்னூற்று ஒன்றில் காங்கிரஸ் கொண்டுவந்ததுதான் இந்த தொகுதி சீரமைப்பு - அதாவது தெரியுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை