உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவோம்: ராகுல் திட்டவட்டம்

மணிப்பூர் விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவோம்: ராகுல் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மணிப்பூர் விவகாரத்தை இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார்கள்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். சமீபத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல், மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மணிப்பூர் மக்களின் நிலைமை குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று (ஜூலை 11) ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தை இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜூலை 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12ம் தேதி வரை நடக்க உள்ளது. பார்லி.,யில்., மணிப்பூர் விவகாரத்தை கேள்வி எழுப்புவோம் என ராகுல் கூறியுள்ளதால், விவாதங்கள் அனல் பறக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இண்டியா கூட்டணியினருக்கு பா.ஜ.,வினரும் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ராஜ்
ஜூலை 12, 2024 04:32

ஒட்டு மொத்த manipur மக்களின் பாது காவலன் இவர்தான் என்ற போலி பிம்பத்தை உண்டாக்க try செய்கிறார். அது kizhthu எறியp படும்.


பேசும் தமிழன்
ஜூலை 11, 2024 18:59

பப்பு.... தான் சொல்வதை மட்டுமெ செய்தியில் போடுவார்கள் என்று நினைத்து மணிப்பூரில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.... ஒரு செய்தியாளர் குறுக்கு கேள்வி கேட்க.... செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்து கொண்டு.... பப்பு எடுத்தார் பாரு ஓட்டம்.... விட்டால் பட்டாயா போய் இருப்பார் போல !!!!


Nandakumar Naidu.
ஜூலை 11, 2024 18:10

ஒரு தேச மற்றும் சமூக விரோத தீய சக்தி. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவார்


SUBBU,MADURAI
ஜூலை 11, 2024 17:53

மூஞ்சியை சோகமாக வைத்துக் கொண்டு மணிப்பூர் மக்களுக்காக உருகுவது போல நாடகம் ஆடும் பப்புவோட நடிப்பெல்லாம் எடுபடப் போவதில்லை.


Rangarajan Cv
ஜூலை 11, 2024 17:38

Please listen to the response. When it hurts you guys are doing walk out. Have courage to hear response.


GMM
ஜூலை 11, 2024 17:33

மணிப்பூர் 3 முறை ராகுல் சென்றும் தீர்வு காண முடியவில்லை. பார்லியில் கூட்டணி MP கள் கேள்வி கேட்க முன், கள நிலவரம் அறிய கூட்டணியினரை அழைத்து செல்ல வேண்டாமா? நேரு குடும்பம் இருக்கும் வரை, காங்கிரஸ் ஒரு தேச பற்றற்ற கட்சியாக தான் இருக்கும். சீனாவிடம் கூலி வேலை செய்து, கம்யூனிஸ்ட் நாட்டை கெடுத்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு. தினமும் விவகாரத்தை உருவாக்குவோம் என்று தைரியமாக கூறவும். நேற்று ஏன் காணவில்லை?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 11, 2024 17:29

கேள்வி கேட்பதை விட என்ன தெரியும்,, இதை தீர்க்க உருப்படியான யோசனை என்ன என்று கேட்டல் ஒன்றும் இல்லை.


வாய்மையே வெல்லும்
ஜூலை 11, 2024 17:28

யாராச்சும் அவரோட கட்சி ஆளு எடுத்து சொல்லுங்க .


KRISHNAN R
ஜூலை 11, 2024 17:20

உள்ளூரில் கூவலாம்.ok... ஆனால் வெளிநாட்டில் போய்... கூவுவது யே ன்


Anand
ஜூலை 11, 2024 16:55

அதாவது, சபை கூடியதும் ஊளையிட்டவாறு கேன்டீனை நோக்கி ஓடுவது...


மேலும் செய்திகள்