உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்

துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்பர்' என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.துபாய் விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:துபாய் விமானக் கண்காட்சியின் போது இன்று தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.உயிர் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், துயரத்தை எதிர்கொண்டுள்ள விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அனில் சவுகான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை